• Jan 19 2025

ஜெயம் ரவிக்கு அட்வைஸ் கொடுத்த குஷ்பு.. என்னெல்லாம் சொல்லி இருக்கார் பாருங்க..

Aathira / 3 months ago

Advertisement

Listen News!

சமூக வலைதள பக்கங்களில் தற்போது பரபரப்பாக பேசப்படும் விடயங்களில் ஒன்றுதான் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயம். ஆரம்பத்தில் இவர்களுடைய விவாகரத்து விஷயம் இணையத்தில் புகைந்த நிலையிலும் பலர் அதை வதந்தி என்று கூறி வந்தார்கள். ஆனால் அந்த தகவலை உண்மையாகும் விதத்தில் ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாகவே ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.

இதை தொடர்ந்து ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில் தன்னிடம் கேட்காமல்  முடிவெடுக்காமல் தன்னிச்சையாகவே ஜெயம் ரவி விவாகரத்து முடிவை எடுத்தார் என்று பரபரப்பு தகவலை வெளியிட்டு இருந்தார். ஆனாலும் இன்றைய தினம் ஜெயம் ரவி கொடுத்த பேட்டியில் அவருக்கு இரண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் தனது பெற்றோரும் ஆர்த்தியின்  பெற்றோரும் இணைந்து கதைத்ததாகவும் உண்மையை உடைத்து இருந்தார்.

இந்த நிலையில், ஜெயம் ரவி - ஆர்த்தி திருமணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட குஷ்பு இத்தனை நாட்கள் மௌனமாக இருந்த நிலையில் தற்போது தனது எக்ஸ் தல பக்கத்தில் கருத்து ஒன்றை பகிர்ந்துள்ளார்.


அதாவது  ஒரு உண்மையான மனிதன் எப்போதும் உயர்ந்து நிற்கின்றான். அவன் தனது தேவை, ஆசை, விருப்பம், சுதந்திரங்கள் என அனைத்தையும் தனது குடும்பத்தின் முன் இரண்டாவது பட்சமாகத்தான் இருக்கின்றது. திருமண வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் இருக்கும். தவறுகள் நடக்கும். அதற்காக வாழ்க்கையை கைவிடுவது சரியானதாக இருக்காது. 

உறவில் சில நேரங்களில் காதல் குறைந்து போகலாம். ஆனால் வாழ்க்கை அழகானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சுயநலத்தோடு எடுக்கும் முடிவுகள் பெரும்பாலும் பூமராங் போல திரும்ப நம்மையே தாக்கும் என்பதை மறக்கக்கூடாது. குழந்தையின் தாயை மதிக்க வேண்டும் என்பது அடிப்படை மரியாதை. இது இல்லாமல் ஒரு மனிதன் மற்றவர்களின் மரியாதையை பெறவும் அல்லது வாழ்க்கையில் வெற்றி பெறவோ முடியாது.

ஒரு தாயை, உன்னை நேசிக்கும் பெண்ணை அவமரியாதை செய்வது வருத்தம் அளிக்கிறது. அன்பு அசையக்கூடும் ஆனால் மரியாதை இதயங்களையும் ஆன்மாக்களையும் ஒன்றாக நிற்கும் குடும்பத்தை போற்றுவதால் உண்மையான பலம் என தனது பதிவில் குஷ்பூ மறைமுகமாக ஜெயம் ரவிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Advertisement

Advertisement