• Aug 20 2025

அன்றும்…இன்றும்... – ரவிமோகனுடன் இணைந்த கெனீஷாவின் பாட்டு வைரல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்.!

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சமூக ஊடகங்களில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்ட விவகாரம் ஒன்று இன்று புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. கெனீஷா – ரவி மோகன் இருவருக்கிடையிலான தனிப்பட்ட உறவு சம்பந்தமான சர்ச்சைகள், இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக் என அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பரவலாகப் பேசப்பட்டன.


இந்நிலையில், ரசிகர்கள் இன்னும் அந்த விவகாரத்திலிருந்து மீளவில்லையென்று இருக்கும் தருணத்தில்… கெனீஷா பாடிய புதிய பாடல் வீடியோ சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சி அளித்த விடயம் என்னவென்றால், அந்த பாட்டின் ஆரம்பத்திலும் முடிவிலும் ரவி மோகனின் காட்சிகள் இடம்பெற்றிருப்பது.

30 விநாடிகள் நீளமுடைய அந்த வீடியோவில் கெனீஷாவின் அழுத்தமான குரல் மற்றும் இசையமைப்பு இவை அனைத்தும் ரசிகர்களுக்கு எதிர்பாராத Emotional Shock கொடுத்துள்ளன. இந்த வரிகளை பலரும் ஒரு காதல் முறிவின் உணர்ச்சி வெளிப்பாடு என பார்க்கின்றார்கள்.


இந்த பாடல் வெளியாகியதிலிருந்து, Instagram மற்றும் யூடியூபில் #அன்றும்_இன்றும் என்ற ஹாஷ்டாக் ஏராளமான பதிவுகளுடன் வைரலாகி வருகின்றது. வீடியோ தற்பொழுது மில்லியன் கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement