• Jul 10 2025

‘படை தலைவன்’ வெற்றியை அடுத்து... தேமுதிக கட்சி எடுத்த அதிரடி முடிவு..! என்ன தெரியுமா?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தேமுதிக தலைமையில் நடைபெற்ற சமீபத்திய முக்கிய கூட்டம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைமை அலுவலகத்தில் மேடையேறிய பேச்சாளர்களின் கருத்துகளில், நடிகர் சண்முக பாண்டியனின் திரைப்படங்களும், அவரது நடிப்பும் கட்சியின் வளர்ச்சிக்கு கருவியாக மாறக்கூடும் என கூறப்பட்டிருக்கின்றது.


பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம், கட்சியின் எதிர்காலத்திற்கான நடவடிக்கைகள், மக்களிடம் கட்சியின் செல்வாக்கை அதிகரிக்கும் விதமான செயல்திட்டங்கள் குறித்துப் பேசும் நோக்கத்துடன் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் போது, சில முக்கிய நிர்வாகிகள் சண்முக பாண்டியனின் திரைப்படங்களின் தாக்கம் பற்றியும், அவர் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 2 திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என்ற ஆலோசனையையும்  முன்வைத்தனர்.


சண்முகபாண்டியன் சமீபத்தில் நடித்த “படை தலைவன்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதும், நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கியிருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement