• Jul 09 2025

தக்லைஃப் தோல்வியால்.. மனச்சோர்வில் சிம்பு! புதிய படங்களில் ஏற்பட்ட மாற்றம்..!

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவரான சிம்பு, மீண்டும் தன்னை நிரூபிக்க நினைக்கும் நடிகராக திரையுலகில் வளர்ந்து வருகின்றார். குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி, பல்வேறு சர்ச்சைகள், மாறுபட்ட படங்களின் தேர்வுகள் என சிம்புவின் திரையுலக பயணம் roller-coaster போல் இருந்தாலும், அவருக்கு ரசிகர்கள் மீதிருந்த அன்பு கொஞ்சமும் குறையவில்லை.


அதனை உறுதிப்படுத்தும் வகையில், சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த 'தக் லைஃப்' படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. சிம்பு – கமல் கூட்டணியில் ஒரு ஜாம்பவான் இயக்குநரான மணிரத்னம் இயக்கத்தில் உருவான படமென்பதால், ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகமும் மிகுந்த நம்பிக்கையுடன் இருந்தது.


எனினும் 'தக் லைஃப்' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பது தான் உண்மை. தக் லைஃப் படத்திற்கு முன்னர் சிம்பு, ஏற்கனவே பல படங்களில் கமிட் செய்யப்பட்டிருந்தார். ஆனால் தக் லைஃப் தோல்வியால், இந்த படங்களுக்கான சம்பள விவகாரங்களை சிம்பு புதிதாக யோசிக்க ஆரம்பித்திருப்பதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

Advertisement