• Mar 12 2025

"7ஜி ரெயின்போ காலனி 2" படத்தின் புதிய அப்டேட்! கொண்டாட ரெடியாகும் ரசிகர்கள்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் புதுமையான கதையம்சத்துடன் வெளியான திரைப்படமே "7ஜி ரெயின்போ காலனி". தற்பொழுது இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது என்ற தகவல் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. இதனால் அந்தப் படத்தைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். 

இப்பொழுது, இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல் பாகத்தை தொடர்ந்து, இரண்டாம் பாகத்தின் கதை மற்றும் காதல் உணர்ச்சிகள்  உயர்ந்த தரத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் எனக் கூறப்படுவதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.


2004ம் ஆண்டு, செல்வராகவன் இயக்கத்தில் வெளியான "7ஜி ரெயின்போ காலனி", தமிழ் சினிமாவின் உணர்வுபூர்வமான காதல் கதைகளைக் கொண்ட முக்கியபடங்களில் ஒன்றாகும். இப்படத்தில் ரவிக்கிருஷ்ணா மற்றும் சோனியா அகர்வால் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது "7ஜி ரெயின்போ காலனி 2" வரப்போகின்றது என்பதால் ரசிகர்கள் மிகுந்த சந்தோசத்தில் உள்ளனர். அத்துடன் இந்தப் படம் முதல் பாகத்துக்கு இணையான உணர்ச்சி மிகுந்த கதை அம்சத்துடன் இருக்கும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் படத்தினை திரையரங்குகளில் பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement