தமிழ் சினிமாவில் தன்னுடைய நக்கலான பேச்சுகளாலும், சர்ச்சைக்குரிய கருத்துகளாலும் அடிக்கடி சமூக ஊடகங்களில் பேசப்படும் நடிகர் கூல் சுரேஷ். இவர் தற்போது தளபதி விஜய்யை பற்றி தெரிவித்த கருத்தால் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், விஜய் சென்னை மசூதியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பங்கேற்றதை நக்கலடித்து பேசியுள்ளார்.
இது, விஜய் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளதோடு, இது தளபதி விஜயின் அரசியல் பயணத்துக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நகைச்சுவை தாக்குதலா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. நேர்காணலின் போது நடிகர் கூல் சுரேஷ் பல விஷயங்களைப் பற்றிப் பேசினார். குறிப்பாக தளபதி விஜய் பற்றிக் கதைத்த கருத்துக்கள் சமூக ஊடகத்தில் பரவியுள்ளது.
அதில் அவர் கூறுகையில், தளபதி விஜய் சமீபத்தில் சென்னையில் ஒரு மசூதியில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை நக்கலடித்ததாக தகவல்கள் வெளியானது. தளபதி விஜய்யை பற்றி எந்தவொரு தவறான விமர்சனமும் அவரது ரசிகர்கள் ஏற்க மாட்டார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கூல் சுரேஷின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Listen News!