• Jun 13 2025

வானத்தில் பறக்க வரும் சூப்பர்மேன்.! யூடியூபில் வைரலான டிரெய்லர்..! சந்தோசத்தில் ரசிகர்கள்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

ஹாலிவூட் சினிமாவில் முதன்மையான சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒருவன் என்றால் அது 'சூப்பர்மேன்'. அவரின் சிவப்பு கால்சட்டை, எவரையும் காப்பாற்றும் கருணையுடனான இதயம் இவை அனைத்தும் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்து வந்தவை.


இந்த சூப்பர் ஹீரோவின் பிறப்பை நோக்கினால், அது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உலக அத்தியாயம். அமெரிக்காவின் ஓவியர் ஜோ சஸ்டர் மற்றும் எழுத்தாளர் ஜெர்ரி செய்கல் ஆகியோரின் கற்பனையில் இருந்து உருவானது 'சூப்பர்மேன்'. 1938 ஆம் ஆண்டு வெளியான Action Comics #1 என்ற காமிக்ஸ் புத்தகத்தில் முதன்முதலாக இக்கதாபாத்திரம் அறிமுகமானது.

அதற்கு முன் காமிக்ஸ் உலகத்தில் ஹீரோக்கள் இருந்தாலும், 'சூப்பர்மேன்' பெற்ற வரவேற்பு, ரசிகர்களின் மனதில் தோன்றிய மனிதத்தன்மை, வீரத்திற்கு உள்ள மதிப்பு ஆகியவற்றால் தனித்துவமானது. அதனை தொடர்ந்து கார்ட்டூன் தொடர்கள், சினிமாக்கள், வீடியோ கேம்கள் எனப் பல வடிவங்களில் சூப்பர்மேன் உயிரோடு இருந்துள்ளார்.


‘சூப்பர்மேன்’ கதாபாத்திரத்தை திரையில் பலர் நடித்தாலும், கிறிஸ்டோபர் ரீவ் தனது நடிப்பால் இந்த கதாபாத்திரமாகவே மாறினார். அவருக்குப் பிறகு, ஹென்றி கவில் DC Extended Universe-இல் ‘Man of Steel’ (2013) படத்தின் மூலம் 21-ஆம் நூற்றாண்டின் சூப்பர்மேன் என ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தார்.

அவரின் படங்கள் மூலம் சூப்பர்மேன் கதாபாத்திரம் கூடுதல் ஆழமடைந்தது. தற்பொழுது மார்வெல் நிறுவனம் தயாரித்த Guardians of the Galaxy படங்கள் போன்றன மூலம் ரசிகர்களிடம் தனி இடம் பெற்ற ஜேம்ஸ்கன், தற்போது DC Studios-இல் ஒரு புதிய புள்ளியை ஆரம்பிக்கிறார்.


அதாவது, DC-வின் புதிய Reboot Universe-ஐ ஆரம்பிக்கும் முதல் படமாக உருவாகியுள்ளது இந்த 'சூப்பர்மேன்' படம். அதற்கேற்ப படத்திற்குப் பெயரும் நேர்த்தியாக "Superman" என்றே வைக்கப்பட்டுள்ளது (முந்தையவை போல Man of Steel, Superman Returns போன்ற பெயர்களில்லை).

இந்த புதிய ‘Superman’ படம் 2025 ஜூலை 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. DC Studios-இன் புதிய உலகத்தின் தொடக்கமாக இருக்கும் இந்தப் படம், முழு ஹாலிவூட் ரசிகர்களுக்கும் முக்கியமான படமாக அமைந்துள்ளது. அந்தவகையில் இப்படத்தின் டிரெய்லர் தற்போது யூடியூபில் வெளியாகி மில்லியன் கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது. 


Advertisement

Advertisement