• Aug 02 2025

குபேரா படத்தின் "என் மகனே.." பாடல் வெளியீடு ..! மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் பன்முகத் திறமை மிக்க முன்னணி நடிகராக திகழ்கிறார் தனுஷ். இவர் நடிகராக மட்டுமின்றி இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் எனப் பல்வேறு துறைகளிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறார். இப்போது அவர் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும்  படம் தான் ‘குபேரா’ (Kubera).


இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட பான் இந்தியா அளவிலான ரிலீஸுக்கு தயாராகிவிட்ட நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள “என் மகனே” என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல், ரசிகர்களின் மனதை உருக்கும் உணர்வுபூர்வமான பாடலாக அமைந்துள்ளது.


படக்குழுவின் தகவலின்படி, இப்படம் வருகின்ற ஜூன் 20-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இது தனுஷின் மிகப்பெரிய பான் இந்திய ரிலீஸாகும். அந்தவகையில் தற்பொழுது யூடியூபில் வெளியான இந்த வீடியோ சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றுள்ளது.


Advertisement

Advertisement