• Jan 26 2026

விஜய் சார் தான் CM சேர்ல ஒக்காரனும்... அதுதான் எனக்கு ஆசை.! பிரபலம் பகீர்

subiththira / 6 days ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைப்பது சாதாரண விஷயம் அல்ல. அதற்கு தைரியம், தன்னம்பிக்கை, மக்கள் மீது அக்கறை ஆகியவை அவசியம். இந்த நிலையில், நடிகர் விஜயின் அரசியல் பயணம் குறித்து மாஸ்டர் மகேந்திரன் வெளியிட்ட கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது.


சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய மாஸ்டர் மகேந்திரன், நடிகர் விஜயின் அரசியல் துணிச்சலை மனதார பாராட்டி, அவர் தமிழக முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்பதே தனது ஆசை என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

மாஸ்டர் மகேந்திரன் அதன்போது, “சினிமாவ விட்டு அரசியலுக்கு வர எத்தனை பேருக்கு தைரியம், தில்லு இருக்குன்னு எனக்குத் தெரியாது. ஆனா, விஜய் அண்ணா கிட்ட அது நிறையவே இருக்கு. அந்த தைரியத்துக்காகவே, அந்த தில்லுக்காகவே CM சேர்ல அவர் ஒக்காரனும். அதுதான் என்னோட ஆசை.” என்று கூறியுள்ளார். 

இந்த கருத்து வெளியாகியதிலிருந்து, விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல் ஆர்வலர்களிடையிலும் இது வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement