பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, மயிலோட அம்மா டாக்டரைப் பார்த்து நாள் தள்ளிப் போச்சு என்று செக் பண்ணிப் பார்த்தோம் ரெண்டு கோடு வந்திருந்திச்சு அதுதான் ஹாஸ்பிடலில பாத்திட்டுப் போகலாம் என்று வந்தேன் என்கிறார். மேலும் ஸ்கான் பண்ணி பார்த்திடலாமா என்று கேட்கிறார். அதுக்கு டாக்டர் ஆமா பாத்திடலாம் என்று சொல்லுறார். பின் டாக்டர் மயிலை ஸ்கான் பண்ணிப் பார்க்கிறார்.
அதைப் பார்த்த பிறகு டாக்டர் மயில் கர்ப்பமாக இல்ல என்று சொல்லுறார். அதைக் கேட்ட உடனே எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதனை அடுத்து மயிலோட அம்மா நீங்க வடிவா பார்த்தீங்களா என்று கேட்கிறார். பின் மயில் அழுது கொண்டிருக்கிறார். பின் டாக்டர் இவங்க கர்ப்பமாக இல்ல என்றது தான் உண்மை என்கிறார்.
பின் கதிரும் ராஜியும் ஹாஸ்பிடல் போய் சரவணனை பார்த்து என்ன நடந்திச்சு என்று கேட்கிறார்கள். இதனை அடுத்து கோமதி கதிர் கிட்ட மயில் கர்ப்பமாவே இல்ல என்று சொல்லி அழுதுகொண்டிருக்கிறார். பின் சரவணன் மயிலோட கதைக்காமலே அங்கிருந்து கோபமாக போறார். அதனைத் தொடர்ந்து மயிலோட அம்மா நாம ஒன்னு நினைக்க தெய்வம் ஒன்னு நினைச்சிடுச்சு என்று சொல்லுறார்.
பிறகு கதிர் சரவணனை பார்த்து வீட்டுக்கு வா என்கிறார். மேலும் உனக்கு ரெண்டு குழந்தை கண்டிப்பாக பிறக்கும் என்று சொல்லுறார். பின் சரவணன் மயில் வீட்டுக்கு வாறதுக்காகத் தான் இப்படி பொய் சொல்லியிருக்கா என்று நினைக்கிறார். இதனை அடுத்து ராஜி மீனாவுக்கு போன் எடுத்து நடந்த எல்லாத்தையும் சொல்லுறார். பிறகு மயில் மாமா என்னோட கதைக்காமலே போயிட்டாரு என்று சொல்லி அழுகுறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!