மகிழ்திருமேனியின் இயக்கத்தில் உருவாகி இன்று வெளியாகி உள்ள திரைப்படமே விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில் திரை உலகின் முன்னணி நடிகர்களான அஜித் , திரிஷா , ஆரவ் மற்றும் ரெஜினா போன்றவர்கள் நடித்துள்ளனர். விடாமுயற்சி தற்போது திரையரங்கு முழுவதும் வெளியாகி உள்ள நிலைமையில் அதனை அனைத்து தல ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன் அந்த படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்த நடிகர்கள் மட்டும் இல்லாது வேறு நடிகர்களும் படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு சென்றுள்ளனர். குறிப்பாக , திரிஷா , ரெஜினா , ஆரவ் , ஷாலினி , ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் எனப் பலரும் படத்தினை தல ரசிகர்களுடன் ரசிகர்களாக இணைந்து பார்த்து வருவதாக சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
மேலும் படத்தின் ஆரம்பத்தில் அஜித் பத்மபூஷன் விருது வாங்கியதனை போடுவார்கள் என்பதை ரசிகர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. படக்குழு திடீர் என்று அதனையும் இணைத்து போட்டதால் ரசிகர்களுக்கு ஷாக்காக இருந்தது. அத்துடன் தல ரசிகர்களுக்கு இன்று முழுவது கொண்டாட்டம் என்றே படத்தை பார்த்த அனைவரும் கூறுகின்றார்கள்.
Listen News!