• Feb 06 2025

ஹாலிவுட்டை மிஞ்சிய ஸ்கீரின் ப்ளேயா? விரதமிருந்த தல Fans-க்கு தடபுடல் விருந்து!

Aathira / 3 hours ago

Advertisement

Listen News!

சமூக வலைத்தள பக்கங்களில் தற்போது அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பற்றிய தகவல்கள், வீடியோக்கள், விமர்சனங்கள் என்பன தான்  வைரலாக காணப்படுகின்றன. தற்போது வரையில் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே அதிக அளவில் குவிந்து வருகின்றன.

மகிழ் திருமேனி இயக்கிய விடாமுயற்சி படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ரெஜினா, அர்ஜுன் மற்றும் பிக் பாஸ் பிரபலமான ஆரவ்  ஆகியோர் நடித்துள்ளார்கள். தற்போது இந்த படத்தை பார்ப்பதற்காகவே இந்த கூட்டணி மொத்தமும் திரையரங்குகளில் என்ட்ரி கொடுத்த வீடியோவும் வைரலாகி வருகிறது.

d_i_a

இந்த நிலையில், விடாமுயற்சி திரைப்படம் பற்றி தனது விமர்சனத்தை முன் வைத்துள்ளார் செய்யாறு பாலு. அதன்படி அவர் கூறுகையில், இந்த படத்தின் இயக்குநர் மகிழ் திருமேனி ஏற்கனவே கூறியது போல அஜித்துக்கு மாஸ் காட்சி, மாஸ் என்ட்ரி எல்லாம் இல்லை. இதனால் படத்தை மிகப்பெரிய எதிர்பார்ப்போடு பார்க்க வராதீர்கள்.


இந்த படத்தில் பெரியதளவான பில்டப் டயலாக்கோ, இண்டோ பாடலும் எதுவும் இல்லை. அஜித்தின் வயதுக்கேற்ற பக்குவத்தை இந்த படத்தில் புரிந்து கொள்ள முடிகின்றது. 

மேலும் இந்த படத்தின் கதை என்னவென்றால், திரிஷா விவாகரத்துக்கு விண்ணப்பிக்கின்றார். அதன் பின்பு தனது அம்மா வீட்டிற்கு போக முனைகின்றார். அவரை அஜித்தே கொண்டு போய் விடுகிறார். அந்த ஒன்பது மணி நேர பயணத்தில் என்ன நடக்கின்றது என்பதுதான் இந்த படத்தின் கதையாக உள்ளது. அதற்கு இடையில் த்ரிஷா கடத்தப்படுகிறார். அதில் தனது மனைவியை அஜித் தேடுக்கின்றார்.


இதன் போது த்ரிஷா விவாகரத்துக்கு விண்ணப்பிக்க காரணம் என்? அவருக்கு வேறு ஒருவருடன் உறவு உள்ளது என்பதால் தானா?  இதில் யார் நல்லவர்? யார் வில்லன்? யார் கெட்டவர்? என்பதை யூகிக்கவே முடியவில்லை.

இதற்கு முன்பு அஜித் நடித்த படங்களின் கெட்டப்பை மாற்றுவது எல்லாம் சாதாரணமாக நடிப்பது போல் இருந்தது. ஆனால் இந்த படத்தில் தன்னுடன் நடித்த அனைவருக்கும் ஸ்கிரீன் ப்ளே கொடுத்துள்ளார் அஜித்.

இதற்கு எந்த கதாநாயகன் ஒத்துக் கொள்வார். அஜித்தை பார்த்து பூமர் என கூறுகின்றார்கள். ஆனால் இப்போது தியேட்டரே  தெறிக்கிறது. படத்தை முழுக்க முழுக்க மகிழ் திருமேனியிடமே அஜித் ஒப்படைத்துள்ளார் என தனது பாசிட்டிவ் விமர்சனத்தை அளித்துள்ளார் செய்யாறு பாலு.

Advertisement

Advertisement