• Aug 02 2025

கைதானார் பிரபல யூடியூபர் 'பிரியாணி மேன்' , யாரோட கம்ளைண்டா இருக்கும் !!

Thisnugan / 1 year ago

Advertisement

Listen News!

"பிரியாணி மேன்" என அறியப்படும் பிரபல யூடியூபர் அபிஷேக் ரபி தனது யூடியூப் பக்கத்தில் ட்ரோல் விடீயோக்கள் எனும் பேரில் சமூக  ஊடகங்களில் வெளியாகும் பதிவுகள் மற்றும் வீடியோக்கள் பற்றி தனது கருத்துக்களை பகிர்வதாக எண்ணி பல வன்ம கருத்துக்களை பகிர்ந்து தனக்கான வியூஸை அதிகரித்து கொண்டார்.


அண்மையில் மற்றொரு பிரபல யூடியூபரான "இர்பான் வியூஸ்" இர்பான் வெளியிட்ட விடீயோக்களின் தவறான பக்கங்களை கடுமையாக விமர்சித்திருந்த  பிரியாணி மேன் மேலும் பல யூடியூபர்கள் பற்றி அவதூறாகவும் ஆபாசமாகவும் பேசி சர்ச்சைகளில் சிக்கினார்.

Biriyani Man

நேற்றைய தினம் நேரலையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தற்கொலைக்கு முயன்ற பிரியாணி மேன்  இன்று காலை பெண்ணொருவரின் புகாரின் அடிப்படையில் சென்னை சைபர் கிரைம் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement