• Apr 26 2024

கமல் ஹாசனை கேவலமாக விமர்சித்த பிரபல இயக்குனர்! அவர் யார் தெரியுமா?

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

கமல்ஹாசன் ஒரு புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் அரசியல்வாதியும் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.


மேலும் கமல்ஹாசன் சிறந்த குழந்தை நட்சத்திரம் மற்றும் சிறந்த நடிகர் என்ற முறையில் 4 தேசிய விருதுகள் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் 19 பிலிம்பேர் விருதுகளும் வென்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் திரைக்கதையாசிரியர், இயக்குநர், பாடலாசிரியர், பின்னணிப் பாடகர், நடன அமைப்பாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்குகின்றார்.


மேலும் இயக்குநர் பாலு மகேந்திரா இயக்கிய மூன்றாம் பிறை திரைப்படத்தில் நடித்தார். இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான இந்திய தேசிய விருது கிடைத்தது இவருக்கு. இந்நிலையில் கமல் ஹாசன் நடித்து வெளிவந்த திரைப்படங்கள் தேவர் மகன் மற்றும் விருமாண்டி.


 இந்த இரு திரைப்படங்களும் பல சர்ச்சைகளை சந்தித்த திரைப்படமாகும். இந்நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ், இயக்குனர் ஆவதற்கு முன் கமல் ஹாசனுக்கு கடுமையான விமர்சனம் கூறி லெட்டர் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.


இதில் தேவர் மகன், விருமாண்டி மற்றும் உன்னைப்போல் ஒருவன் ஆகிய படங்களில் தவறான முறையில் சாதி சார்ந்த விஷயங்களை கமல் ஹாசன் மோசமாக காட்டியுள்ளதாக கூறி கடுமையான விமர்சனத்தை கூறி லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார் மாரி செல்வராஜ்.

Advertisement

Advertisement

Advertisement