• Jan 19 2025

புற்றுநோயால் காலமானார் பிரபல நடிகை தாஸ்குப்தா...!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

வங்க மொழி இயக்குநரான சத்யஜித் ரேவின் முதல் திரைப்படமான `பதர் பாஞ்சாலி' என்ற படத்தில் குழந்தை நச்சத்திரமாக துர்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் பெங்காலி நடிகை உமா தாஸ்குப்தா. இன்றும் இத்திரைப்படம் மாற்று சினிமாவுக்கான முன்னோடியாகவும் திகழ்ந்து வருகிறது.


d_i_a

சினிமா மீது ஆர்வம் கொண்ட பலருக்கும் முதலில் பரிந்துரைப்பது இத்திரைப்படமாகதான் இருக்கும். அப்போது இவர் கொண்டாடப்பட்டார். தற்போது 84 வயதான உமா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கடும் அவதியை சந்தித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து நேற்றைய தினம் கொல்கத்தாவில் இயற்கை எய்தியிருக்கிறார். 


`பதர் பாஞ்சாலி' திரைப்படமே இவருக்கு முதல் மற்றும் கடைசி திரைப்படம். அதன் பிறகு உமா வேறு எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை. ஆனால் இன்றும் உலக சினிமாவின் முக்கியமான பக்கங்களில் இவருடைய கதாபாத்திரமும் ஒன்றாக இருக்கிறது. இவருக்கு திரை பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம். 




Advertisement

Advertisement