• May 21 2024

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானவர் நடிகர் பிரபுதேவா. இவர் நடனம் மட்டுமன்றி நடிப்பு இயக்கம் என பல திறமை கொண்டவராக சினிமாவை கலக்கி வருகின்றார்,

இந்நிலையில் நடிகர் பிரபுதேவா, இயக்குநர் ராகவன் இயக்கத்தில் மை டியர் பூதம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். இவர் மஞ்சப்பை படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரமேஷ் பிள்ளை தயாரித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இறுதி கட்ட போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில், இந்தப்படத்தின் ரிலீஸ் திகதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது இந்தப் படத்தில் இடம்பெற்ற "எனக்கு மட்டும் ஏன் ஏன்" என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமையை தற்போது ஜி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரபுதேவா மற்றும் அஸ்வந்த் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். குழந்தைகளை கவரும் மாயாஜால படமாக இப்படம் உருவாகி உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்த நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் படத்தை வெகுவாக ரசித்து இயக்குநர் மற்றும் படக்குழுவினரை பாராட்டி உள்ளதாக சொல்லப்படுகிறது மேலும் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement