• May 10 2024

'சர்தார்' தெலுங்கு ரிலீஸ் உரிமையை கைப்பற்றிய பிரபல நடிகர்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

'பருத்தி வீரன்' என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் என்று கூறும் அளவிற்கு தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் பல ரசிகர்களின் மனங்களை வென்றவர் நடிகர் கார்த்தி. மேலும் இவர் பிரபல இயக்குநரான மணிரத்தினத்திடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கின்றார்.

இவர் தனது அறிமுக படத்திலேயே சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது போன்ற பாராட்டத்தக்க பல விருதுகளை வென்றிருக்கின்றார். 'பருத்தி வீரன்' என்ற படத்தை தொடர்ந்து 'ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, தோழா, பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்நிலையில் இவர் தற்போது இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார்' என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் கார்த்தியுடன் இணைந்து ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அத்தோடு இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். தற்போது 'சர்தார்' என்ற இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் தயாரிப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் நடிகர் கார்த்தி நாளைய தினம் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு சர்ப்பிரைஸாக இந்த படத்தினுடைய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதவாது இப்படம் தீபாவளிக்கு வெளியிடப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது இந்தப் படத்தின் உடைய தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனமான கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. மேலும் ஆஹா ஓடிடி இந்தப் படத்தை வாங்கி ரிலீஸீக்கு பின் வெளியிடவுள்ளது. இந்நிலையில் கார்த்தி நடிக்கும் இப்படத்தினுடைய தெலுங்கு டப்பிங் உரிமையை பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் நிறுவனமான 'அன்னபூர்ணா ஸ்டூடியோஸ்' கைப்பற்றியுள்ளது. இதற்காக நடிகர் கார்த்தி நாகார்ஜுனாவிற்கு மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்து இருக்கின்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement