• Apr 27 2024

நயன்தாராவின் கணவரா இப்படி இருக்கிறார்…? நேற்று சன்டிவியில் அம்பலமான தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட இயக்குநர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என தமிழ் திரையுலகில் பணியாற்றி வருபவர் விக்னேஷ் சிவன். நானும் ரௌடி தான் என்ற திரைப்பட காலத்தில் இருந்தே காதலராக வலம் வந்த இவருக்கும், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கும் கடந்த ஜூன் மாதம் 9- ஆம் திகதி பிரமாண்டமாக மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

மேலும் மகாபலிபுரத்தில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி உள்ளது.

இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வந்தது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா பொருத்தம் சூப்பர் என ரசிகர்கள் புகைப்படங்களை பகிர்ந்து கமெண்ட் செய்து வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். திருமணம் முடிந்த கையோடு திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

விக்னேஷ் சிவன் நயன்தாரா பிரஸ் மீட் வந்து செய்தியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை சந்தித்து தங்களது எதிர்காலத்திற்கு அனைவரது ஆசிர்வாதமும் தேவை என கூறி நன்றி கூறினார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

மேலும் புதுமணத் தம்பதியான நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜூன் 12 நண்பகல் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கினர். கேரளாவின் திருவல்லாவில் வசிக்கும் நயன்தாராவின் தாயார் மற்றும் குடும்பத்தினரை சந்தித்து ஆசி பெற நட்சத்திர ஜோடி வந்தனர்.

நடிகை நயன்தாராவுக்கு அடுத்தடுத்து ஷூட்டிங் இருப்பதால் அவர்கள் இருவரும் ஹனிமூன் செல்லும் பிளானை தள்ளி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. திருமணம் முடிந்ததும் முதலில் ஜவான் படத்தில் நடிப்பதாக இருந்தது.

எனினும் தற்போது நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் ட்ரிப் சென்றுள்ளனர்.அத்தோடு தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எடுத்த புகைப்படங்களை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

நேற்று முன்தினம் ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்துவிட்டு இந்தியா திரும்பிய விக்கி – நயன் ஜோடி, வீட்டுக்கு கூட வராமல் நேராக மும்பை சென்றுள்ளது. அத்தோடு அங்கு அட்லீ இயக்கும் ஜவான் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அதில் கலந்துகொள்வதற்காக நயன்தாரா அங்கு சென்றுள்ளார்.

இவ்வாறு இருக்கையில் நேற்று சன்டிவியில் தனுஷின் வேலை இல்லாத பட்டதாரி படம் ஒளிபரப்பப்பட்டது .அதில் சிறிய கதாப்பாத்திரத்தில் விக்கியும் நடித்துள்ளார்.

அதைப் பார்த்த ரசிகர்கள் இது நம்ம விக்கியா..? அந்த காலத்தில் எப்படி இருந்துள்ளார்..? என்ன விக்கி உங்களுக்கு கிடைத்த வாழ்க்கை..அன்று சாதாரண மனிதராக இருந்த நீங்கள் இன்று ராஜாவாக வலம் வருகுறீர்கள் என கூறியதோடு உங்கள் தோற்றத்தை சன்டிவி அம்பலப்படுத்தி விட்டதே என காமெடியாக பதிவு செய்துள்ளார்கள் ரசிகர்கள்.இந்த விடயம் தற்போது வைரலாகி வருகின்றது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement