• Dec 07 2024

நேருக்கு நேராக எழில் விடுத்த மிரட்டல்..?? ஆடிப்போன கோபி.. பொலிஸிடம் பாக்கியா கோரிக்கை

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா கோபியை திட்டிவிட்டு சென்ற பிறகு ராதிகா கண்டபடி அவரை திட்டுகின்றார். மேலும் உங்களால் உங்களுடைய முன்னாள் மனைவியை மறக்க முடியவில்லை. நான் உங்களிடம் காசு பணமா கேட்டேன். என்னை நிம்மதியாக இருக்க விட மாட்டீர்களா என்று சரமாரியாக திட்டுகின்றார்.

இதை தொடர்ந்து எழில் ரெஸ்டாரண்டுக்கு செல்ல, அங்கு ஈஸ்வரியும் செல்வியும் இருக்கின்றார்கள். அப்பொழுது அம்மா எங்கே என்று கேட்க, அம்மா வெளியே போனதாக சொல்லுகின்றார் ஈஸ்வரி. மேலும் ரெஸ்டாரண்டில் நடந்த பிரச்சனைக்கு கோபிதான் காரணம் என்ற உண்மையை சொல்லுகின்றார்.

d_i_a

இதைக் கேட்ட எழில் கோபத்தில் நேரே கோபியின் ரெஸ்டாரண்டுக்கு சென்று அங்கு, நீங்க எல்லாம் ஒரு மனுஷனா என திட்டுகின்றார். மேலும் தன்னால் தான் பட வாய்ப்பு கிடைத்ததாக கோபி சொல்ல, நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும். நான் ப்ரொடியூசர் ஓட கதைக்கிறேன். எனக்கு இந்த சான்ஸ் வேண்டாம் என்று சொல்லுகின்றார்.


மேலும் எங்க அம்மாவிற்கு எத்தனையோ பிரச்சனை கொடுத்து இருக்கீங்க ஆனா இத சும்மா விடமாட்டேன். அம்மா சும்மா விட்டாலும் நான் சும்மா விட மாட்டேன் என்று கோபிக்கு எச்சரிக்கை விடுத்து செல்கின்றார்.

அதன் பின்பு பாக்கியா செப்புடன் போய் கோபி மீது போலீஸ் கம்ப்ளைன்ட் கொடுக்கின்றார். இறுதியாக வீட்டுக்கு வந்த கோபியுடன் ராதிகாவும் பேசாமல் இருக்கின்றார். கமலா அவள் சமாதானம் ஆகும் வரை கதைக்க வேண்டாம் என்று சொல்லுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement