• Feb 22 2025

ஜேசிபி வந்தா கூட கூட்டம் கூடும்! புஷ்பா-2கு சம்மந்தமே இல்லை! நடிகர் சித்தார் அதிரடி..

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

அல்லு அர்ஜுன், ராஷ்மிக்கா மந்தனா, பஹத் பஷில் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் புஷ்பா-2. இது பேன் இந்தியா திரைப்படமாக தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் ரிலீஸாகியுள்ளது. தற்போது கலவையான விமர்சனம் பெற்று வரும் நிலையில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. பிரபலங்கள்  பலவாறு கருத்து தெரிவித்து வரும் நிலையில் நடிகர் சித்தார் இவ்வாறு ஒரு கருத்தை முன் வைத்துள்ளார்.   


நடிகர் சித்தார் நடிப்பில் சமீபத்தில் வெளியான சித்தா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது மிஸ் யூ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நேரத்தில் இவரிடம் புஷ்பா- 2 திரைப்பட ப்ரோமோஷன்பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த மதன் கௌரி கேள்வி கேட்டார். அதற்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 


இந்தியாவில் கூட்டம் கூடுவது பெரிய பிரச்சினை இல்லை. அது ஒரு மார்க்கெட்டிங் தான். நம்ம ஊருல கட்டிடம் வேளைக்கு ஜேசிபி வந்தா கூட கூட்டம் கூடும் புஷ்பா 2க்காக பீகார்ல கூட்டம் கூடுறது பெரிய விஷயம் இல்லை. ஒரு பெரிய கிரவுட் போட்டு விளம்பரம் செய்தால் கூட்டம் கூடும். அதுக்காக அவங்களுக்கு ஒரு பாட்டு இருக்கு படம் இருக்குனா அது ஓகே.


d_i_a

ஆனா இந்தியால கூட்டம் கூடுவதற்கும் படத்தின் கொலிட்டிக்கும் சம்மந்தம் இல்லை. அப்டினு பார்த்தா எல்லா அரசியல் கட்ச்சியும் ஜெயிக்கணுமே எல்லா கட்சி மீட்டிங்கும் கூட்டம் கூடுது. பிரியாணி, குவாட்டருக்காகவும் கூட்டம் கூடும், கை தட்டு வாங்குறது பெரிய விஷயம் இல்லை அது சுலபமான வேலை தான் என்று கூறியுள்ளார் நடிகர் சித்தார்த்.   


Advertisement

Advertisement