• Nov 10 2024

தர்ஷினியின் திருமணத்தை நிறுத்த என்ட்ரியாகும் பிரபலம்! குணசேகரன் செய்த தில்லாலங்கடி

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் அவசர அவசரமாக சித்தார்த் தர்ஷினிக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார் குணசேகரன். இதனால் அனைவரையும் மிரட்டி அடிபணிய வைக்கிறார். அவர்களும் வேறு வழியின்றி திருமணத்தில் விருப்பமில்லாமல் அனைத்தையும் சகித்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

ஆனால் இந்த திருமணத்தை எப்படியாவது நிறுத்த வேண்டுமென ஜனனியும் ஏனைய மருமகளும் வரும்போது அவர்களை உள்ளே வரவிடாமல் பூட்டை போட்டு ரவுடிகள் இடையூறு செய்கிறார்கள். ஆனாலும் அவர்கள் கேட்டின் மேலே ஏறி உள்ளே வந்து விடுகிறார்கள்.

இவ்வாறு தடைகளை தாண்டி மண்டபத்துக்குள் வந்த ஜனனிக்கு ஏனையோருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. அந்த நேரத்தில் போலிசும் அங்கு வந்து விடுகிறார்கள்.


அதாவது குணசேகரன் தர்ஷினி சித்தார்த்துக்கு பதிலாக ராமசாமி  கீர்த்தியை மாலையும் கழுத்துமாக உட்கார வைத்து தில்லாலங்கடி வேலை செய்துள்ளார்.

அங்கு வந்த போலீசார் உனக்கு இங்க கல்யாணம் ஏற்பாடு நடக்குதா என தர்ஷினியிடம் கேட்க, அவர் இல்லை என தலையாட்டுகிறார். ஈஸ்வரி சொல்லு என கத்தவும் அவர் பேசாமல் இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இதை பார்த்த இன்ஸ்பெக்டர் ஜனனிதான் தவறாக புகார் கொடுத்ததாக சொல்லி அங்கு இருந்து சென்று விடுகிறார்கள். அதன் பின்பு கல்யாண மாலை தர்ஷினி சித்தார்த் கழுத்துக்கு  மாறுகிறது.


இதன் போது ஜனனி, குணசேகரனை பார்த்து லாஸ்ட் வார்னிங்  கொடுக்கிறேன் இதோடு எல்லாத்தையும் நிறுத்திக்கோங்க என்று கோபமாக சொல்ல, எல்லாரையும் அடிச்சு இங்கிருந்து காலி பண்ணுங்க என ஆர்டர் போடுகிறார் குணசேகரன்.

இதனால் மண்டபத்திற்குள் கலவரம் நடக்க ஈஸ்வரி ஆவேசமாக குணசேகரை தாக்க முயற்சிக்கிறார். அந்த நேரத்தில் சித்தார்த் தர்சினிக்கு தாலி கட்டப் போவதை பார்த்த நந்தினி, ஜனனி அங்க பாரு.. என கத்த எல்லார் கவனமும் மனமேடை மீது திரும்புகிறது. இதுதான் இன்றைய நாளுக்கான ப்ரோமோ.


இவ்வாறு அனைவரும் அதிர்ச்சி அடையும் அளவிற்கு அங்கு என்ன நடந்தது என்பது சஸ்பென்ஸ் ஆகவே உள்ளது. ஆனாலும் தர்ஷினி கல்யாண மேடையில் இருந்து எழும்பி வருவதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, தர்ஷினியின் கல்யாணத்தை நிறுத்த புதிதாய் ஒருவர் என்ட்ரி கொடுப்பதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement