• Apr 27 2024

ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க்... உடனே அக்கவுண்டை நீக்கிய அவரின் முன்னாள் காதலியான பிரபல நடிகை.... நடந்தது என்ன..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

உலகத்தில் உள்ள பணக்காரர்கள் பட்டியலின் வரிசையில் நம்பர் 1 இடத்தில் உள்ளவர் எலான் மஸ்க். இவர் உலகளவில் பலகோடி மக்கள் பயன்படுத்தும் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை சமீபத்தில் பல கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளார். அத்தோடு அவர் ட்விட்டர் நிறுவனத்தின் அதிபரான பின்னர் உடனடியாக பல அதிரடியான செயற்பாடுகளையும் முன்னெடுத்து வருகின்றார்.


குறிப்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டதன் காரணமாக கடந்த சில மாதங்களாக முடக்கம் செய்யப்பட்டு இருந்த முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் ட்விட்டர் பக்கத்தையும் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். 

அதுமட்டுமல்லாது ட்விட்டரில் அக்கவுண்ட் வைத்திருக்கும் பிரபலங்களின் ஐடிக்கு ப்ளூ டிக் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அதற்கும் அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார் எலான் மஸ்க். இவரின் இந்த நடவடிக்கை ட்விட்டர் பயனாளர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

இதன் காரணமாக டோனி ப்ராக்ஸ்டன், நடிகை ஷோண்டா ரைம்ஸ், ஓய்வுபெற்ற தொழில் முறை மல்யுத்த வீரர் மிக் ஃபோலே உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் உடனடியாகத் தமது ட்விட்டரில் இருந்து வெளியேறியுள்ளனர். இந்த வரிசையில் எலான் மஸ்க்கின் முன்னாள் காதலி ஒருவரும் ஷாக்கிங் கொடுத்துள்ளார்.


அதாவது ஹாலிவுட் பிரபலங்களான ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் இருவரும் 2015-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்பு இவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து தான் எலான் மஸ்க்கையும் காதலித்து வந்தார் நடிகை ஆம்பர் ஹெர்ட். 

குறிப்பாக இந்த ஜோடியானது 2016 முதல் 2018 வரை ஒன்றாக வாழ்ந்து வந்தனர். எலான் மஸ்க் - ஆம்பர் ஹெர்ட் ஜோடி விரைவில் திருமணம் செய்துகொள்வார்கள் என பலராலும் எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இருவரும் பிரிந்து கொண்டனர்.


இந்நிலையில் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கியதும், தனது ட்விட்டர் அக்கவுண்டை நீக்கி இருக்கின்றார் ஆம்பர் ஹெர்ட். இது சமூக வலைத்தள பாவனையாளர் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேலும் எலான் மஸ்குடன் ஏற்பட்ட காதல் தோல்வியின் விரக்தியில் தான் ஆம்பர் ஹெர்ட் இப்படி ட்விட்டர் அக்கவுண்டை நீக்கி விட்டாரா எனவும் நெட்டிசன்கள் விவாதிக்க தொடங்கி விட்டனர். 


ஆனாலும் இதுகுறித்த கேள்விகளுக்கு ஆம்பர் ஹெர்ட் சார்பில் எந்த விதமான விளக்கமும் இதுவரை அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement