• Jan 18 2025

என் செல்லத்தை கோவப்படுத்தாதீங்கடா! கடுப்பான சௌந்தர்யா! வெளியான ப்ரோமோ...

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பமாகி 4 நாட்களாகிறது. இன்று முதல் ப்ரோமோவில் நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் யார் வெளியேறுவார் என்பது குறித்து பேசப்பட்டது. இதில் பெரும்பான்மையான போட்டியாளர் சௌந்தர்யா, ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகியோரின் பெயர்களை முன் வைத்தனர். 


இந்த நிலையில், தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த இரண்டாவது ப்ரோமோ வீடியோவில், அனைத்து போட்டியாளர்களும் ஒரே இடத்தில் இருக்க, நாமினேஷன் குறித்து பேசியதை பற்றி தனது கருத்தை கூறுகிறார். 


அப்போது இதுபோன்ற விஷயத்தை தனியாக பேசலாமே, ஏன் அனைவரையும் அழைத்து பேசவேண்டும் என அர்னவ் கேட்கிறார். கூட்டத்தில் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கும்போது பைத்தியம் போல் என்னால் கத்த முடியாது, எங்கு பேசவேண்டுமோ அங்கு தான் நான் பேசுவேன் என சௌந்தர்யா கூறுகிறார். மேலும், என்னால் அனைவரையும் போல் தெளிவாக பேச தெரியாது என சௌந்தர்யா கூற, உனக்கு பேச தெரியாதா என சுனிதா கேட்கிறார்.


Advertisement

Advertisement