பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், பாக்கியா தனக்கு ரெஸ்டாரண்டில் புதிய ஆர்டர் வந்ததாகவும் அதற்கு லெபனீஸ் டிஸ் செய்வதற்கு தெரியவில்லை என்று குழம்பிக் கொண்டிருக்க, அங்கு வந்த கோபி லெபனீஸ் டிஸ் செய்யத் தெரிந்த ஒரு செப்பை புதிதாக வேலைக்கு எடுக்கலாம் என்று ஐடியா கொடுக்கின்றார். இதனை சரியென ஜெனியும் செழியனும் சொல்லுகின்றார்கள். ஆனாலும் தனக்கு டைம் தேவை என்று பாக்கியா சொல்லுகின்றார்.
அதன் பின்பு ராதிகா கால் பண்ணவும், கோபி தனது வீட்டில் எல்லாரும் தன்னை விழுந்து விழுந்து கவனிப்பதாகவும் தன்னை அம்மா சின்ன குழந்தை போல் பார்த்துக் கொள்வதாகவும் வீட்டார் பற்றியே பேசிக் கொண்டுள்ளார். மேலும் பாக்கியா ரெஸ்டாரண்ட் பிரச்சனைக்கு ஹெல்ப் பண்ணியதாகவும் சொல்லுகின்றார்.
d_i_a
இதைக் கேட்ட ராதிகா, அப்படி என்றால் நீங்கள் உங்களுடைய வீட்டில் ஜாலியாக இருக்கிறீர்களா? எங்களுடைய நினைப்பு இல்லையா? காலையில் உங்களை பார்க்க வந்தேன் என்று சொல்லுகிறார். ஆனாலும் நீ வந்ததை யாரும் என்னிடம் சொல்லவில்லை என்று கோபி சொல்லுகின்றார். மேலும் தான் இங்கு நிம்மதியாக தூங்குவதாக ராதிகாவுக்கு சொல்லுகின்றார்.
அதன் பின்பு பாக்யா கிச்சனில் வேலை செய்து கொண்டிருக்க, அங்கு சென்ற கோபி டைம் ஆகுது தூங்கவில்லையா? உடம்பு என்னத்துக்கு ஆகும்.. என்று பாக்கியா மீது அக்கறை கொண்டு கதைக்கின்றார். ஆனாலும் பாக்கியா இவற்றையெல்லாம் செய்யவில்லை என்றால் அம்மாவை பற்றி தான் தப்பாக பேசுவார்கள். அம்மா சரியாக கவனிக்கவில்லை என்பார்கள் என்று கோபிக்கு பதிலடி கொடுக்கின்றார்.
ஆனாலும் கோபி தான் தெரியாமல் அனைத்தையும் பண்ணி விட்டேன். தன்னுடைய நிலைமை அப்படி என்று மீண்டும் பாக்யாவிடம் மன்னிப்பு கேட்கின்றார். அதற்கு பாக்கியா எனது வேலைகள் முடிந்துவிட்டது. நீங்கள் லைட்டை ஆஃப் பண்றீங்களா? இல்ல நான் லைட்டை ஆப் பண்ணிட்டு செல்லவா என்று கேட்கின்றார். அதற்கு நானே ஆப் பண்ணுகின்றேன் என்று கோபி சொல்லுகின்றார்.
அதன் பின்பு ஈஸ்வரியும் பாக்யா உனது வாழ்க்கையில் வந்திருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். ஆனால் நீ மிஸ் பண்ணி விட்டாய் என்று சொல்கின்றார். அதன் பின்பு வாக்கிங் சென்ற இடத்திலும் பாக்யாவை பின்தொடர்ந்த கோபி, அவரை புகழ்ந்து பேசுகின்றார். இதனை ராதிகா பார்த்து விடுகின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!