• Apr 17 2025

சாண்டி மாஸ்டரின் காலில் விழுந்த மணிகண்டன்..! எதற்காகத் தெரியுமா..?

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சினிமா நிகழ்ச்சி ஒன்றில் புகழ்பெற்ற நடன இயக்குநர் சாண்டி மாஸ்டருடன், அவரது நெருங்கிய நண்பரும் திறமையான நடிகருமான மணிகண்டன் இணைந்திருந்தார். இந்நிகழ்ச்சியின் போது, இருவரையும் மேடையில் நடனமாட அழைத்தனர். அதன்போது எதிர்பாராத விதமாக, மணிகண்டன் சாண்டி மாஸ்டரின் காலில் விழுந்து நான் டான்ஸ் ஆடமாட்டேன் எனக் கூறியிருந்தார். இந்தத் தருணம் நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


மணிகண்டன் தனது நட்பை வெளிப்படுத்தும் வகையில் சாண்டி மாஸ்டரின் காலில் விழுந்த விதம், அவர்கள் இடையே உள்ள அன்பு மற்றும் மரியாதையை வெளிப்படுத்தியிருந்தது. நிகழ்ச்சியில் இருந்தவர்கள், மணிகண்டன் மற்றும் சாண்டிக்கு இடையே இப்படி ஒரு Bonding-ஆ..?" என வியப்புடன் பேசிக் கொண்டனர்.

நிகழ்ச்சி முழுவதும், சாண்டி மற்றும் மணிகண்டன் இருவரும் தங்களது உறவை வெளிப்படுத்தும் விதமாகவும் இருந்தனர். இருவரும் இதனைத் தொடர்ந்து மேடையில் சிறப்பான நடன நிகழ்வுகளை நிகழ்த்தினர். 


பின்னர் சாண்டி மாஸ்டர், தனது நடனத் திறமைகளால் அங்கிருந்த அனைவரையும் மிரளச்செய்தார். இந்த நிகழ்ச்சி சாண்டி மற்றும் மணிகண்டன் இருவரின் உறவை மேலும் உறுதியாக்கியுள்ளது. நட்பு என்ற பந்தம் சினிமா உலகத்தில் எவ்வளவு அரிதானது என்பதை இந்த நிகழ்வு நிரூபித்துவிட்டது.

Advertisement

Advertisement