• May 09 2025

சிம்புவின் சூப்பர்ஹிட் திரைப்படம் ஜப்பானில் வெளியாகின்றது..!உலகம் தாண்டிய வெற்றி பயணம்....

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

2021ம் ஆண்டு வெளியான 'மாநாடு' திரைப்படத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா மற்றும் மனோஜ் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். குடும்ப கதையம்சத்தைக் கொண்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. 


வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய சாதனையைப் பெற்றது. சிம்புவின் திறமையான நடிப்பு, எஸ்.ஜே. சூர்யாவின் சிறப்பான கதைப்பின்னணி என்பன விமர்சகர்களிடம் பாராட்டைப் பெற்றன. தற்பொழுது இப்படம் குறித்து தயாரிப்பாளர் பல கருத்துக்களைக் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல கண்டங்களை கடந்தும் நேசிக்கப்படும். 'மாநாடு' திரைப்படம் இப்போது ஜப்பானில் மே மாதம் வெளியாகின்றது. இந்தப் படத்தின் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கவரும் என்பதில் நம்பிக்கை இருக்கின்றது," எனத் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் சினிமா சந்தையில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இந்த வெளியீடு, 'மாநாடு' திரைப்படத்தின் சர்வதேச அடையாளத்தை மேலும் உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. பெரும் எதிர்பார்ப்புடன் ஜப்பானிய ரசிகர்களிடமும் 'மாநாடு' பெரும் வரவேற்பைப் பெறும் எனத் தயாரிப்புக் குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. மே மாதம் ஜப்பானில் வெளியாகும் 'மாநாடு' திரைப்படம், தமிழ் சினிமாவின் பெருமையை உலக அரங்கில் பரப்பும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement