• Apr 26 2024

அடுத்த வாரமும் பிக்பாஸ் வீட்டை ஆட்டிப் படைக்க போறது அசீம் தான்... காரணம் என்ன தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசனானது 21 போட்டியாளர்களுடன் அட்டகாசமாக ஆரம்பமான நிலையில் தற்போது 3ஆவது வாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்யவுள்ளது. இப்போட்டியாளர்களில் ஒருவராக இருப்பவரே அசீம். இவர் சக போட்டியாளர்களுடன் நடந்து கொள்ளும் விதமானது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றது. 


இதனால போன வாரம் போல் அல்லாது இந்த வாரம் அவரை வெளுத்து வாங்கி இருக்கின்றார் கமல். அதாவது "அசீம் கடந்த வாரம் போலவே இந்த வாரமும் நான் மன்னிப்பு கேட்கிறேன். என் மகனுக்கு நான் நல்ல ரோல் மாடலா இருக்கணும் என டிராமா அழுகை எல்லாம் போட்டு மன்னிப்பு கேட்க வேண்டாம். நீங்க செஞ்சது யாராலும் மன்னிக்க முடியாத ஒரு தப்பு. உங்களை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்" எனக் கடுமையாக கூறி இருந்தார்.


அதுமட்டுமல்லாது கடந்த வாரம் தனலட்சுமி, சிவின், அமுதவாணன், விக்ரமன் உள்ளிட்ட போட்டியாளர்களிடம் அசீம் மோசமாக நடந்து கொண்டதுக்கு அவருக்கு பெரிய தண்டனை கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்த நிலையில், வெறும் கண்டிப்புடன் கமல் விட்டதை பார்த்து ரசிகர்கள் பலரும் ரொம்பவே வருத்தம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் அசல் கோளாருக்கே மக்கள் ஓட்டு போடாமல் இந்த வாரம் ஓட விட்டுள்ள நிலையில், அசீம் செய்த வேலைக்கு அவருக்கு எப்படி ஓட்டு கிடைத்திருக்கும். ஆனால், அவருக்கு பின்னால் பெரிய பிஆர் டீம் வேலை செய்து வருவது தான் அசீம் இந்த வாரமும் எஸ்கேப் ஆக காரணம் எனக் கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

மேலும் அந்த காரணத்தில் தான் இவ்வளவு தைரியத்தில் அசீமும் அசால்ட்டாக கமல் அசிங்கப்படுத்தும் போது கூட அப்படி சிரித்து பேசினார் எனவும் திட்டித் தீர்த்து வருகின்றனர். அத்தோடு திருநங்கை போட்டியாளர் என்பதற்காக நான் சிவின் கிட்ட அப்படி ஆக்‌ஷன் பண்ணல என்றும் சும்மா வெறுப்பேற்றத்தான் பண்ணினேன் என்றும் அசீம் அசால்ட்டாக கூறி விட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

அதுமட்டுமல்லாது கடந்த வாரம் அத்தனை போட்டியாளர்களும் ரெட் கார்டு கொடுத்து பேசிய நிலையில், தனியாக கேமரா முன்பாக எல்லாம் சென்று இனிமேல் இப்படி எல்லாம் நடக்க மாட்டேன் என வருத்தப்பட்ட அளவுக்கு கூட அசீம் இந்த வாரம் கொஞ்சமும் வருத்தப்படவில்லை. 

அதேவேளை கமல் சத்யா படத்தின் கதையை சொல்லும் போதெல்லாம், ஆரம்பித்து விட்டார் டா என்பது போலவே அசீம் கமலை பார்த்த காட்சிகளை போட்டும் நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

இவ்வாறாக அடுக்கடுக்காக அசீம் பல தவறுகள் செய்தும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சும்மா வைத்திருப்பதற்கு காரணம் அசீம் தான் அடுத்தடுத்த வார பிக்பாஸ் சீசன் 6ஐ ஓட்ட கன்டென்ட் கொடுக்கப் போறவர் என்பது தான் எனவும் கூறி ரசிகர்கள் தங்களின் அதிருப்தியை சமூக வலைத்தளங்களின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement