• Apr 17 2026

'டிக்கெட் டூ பினாலே' எலிமினேட்டான போட்டியாளர்கள் யார் தெரியுமா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது 87 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்கின்றது.

இந்த நிலையில், இன்று வெளியான முதலாவது ப்ரோமோவில், அடுத்த கட்ட டாஸ்க் குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், விஷ்ணு, மாயா, ரவீனா, தினேஷ், மணி, பூர்ணிமா, விசித்ரா மற்றும் நிக்சன் ஆகியோர் கலந்து கொள்ள, அர்ச்சனா, விஜய் வர்மா நடுவர்களாக இருக்கின்றனர்.


அதன்படி, குறித்த முயல்மேக்ஸ் டாஸ்க்கில் கொடுக்கப்பட்டு இருக்கும் அறிவுரைகளின் படி கிரேடுகளில் முன்னேறி முயலை அடைய வேண்டும்.

இவ்வாறு ஒவ்வொருவருக்கும் ஒரு கார்டு கொடுக்கப்பட்ட நிலையில், முதலாவதாக ரவீனா எலிமினேட் ஆகிறார். அவரை தொடர்ந்து விஷ்ணு, மணி ஆகிய இருவரும் எலிமினேட் ஆகின்றனர். 

இறுதியாக போட்டியின் களத்தில் பூர்ணிமா, தினேஷ்,விசித்ரா, நிக்சன்,  மாயா நிற்பதுடன் ப்ரோமோ முடிவுறுகின்றது.

Advertisement

Advertisement