• Jan 19 2025

மனோஜின் உண்மை முகம் வெளுத்தது? ரோகிணியை சந்தேகப்பட்ட அண்ணாமலை! சூடுபிடிக்கும் சிறகடிக்க ஆசை சீரியல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதில், வீட்டிலுள்ள எல்லா வேலைகளையும் மீனா செய்து கொண்டு இருக்க, அங்க வந்த முத்து, சாப்பிட்ட தட்ட கூட கழுவி வைக்க மாட்டாங்களா? நீ தான் எல்லாம் செய்யணுமா என கோவப்பட,  நீங்க அமைதியா இருங்க நான் பார்த்துக்கிறேன் என்று முத்து சமாதானம் செய்கிறார்.  

மேலும், உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா என கேட்க, நான் வெளிய சாப்பிட்டன், எனக்கு தண்ணி மட்டும் போதுமென முத்து சொல்ல, மீனா சுடுதண்ணி வச்சு எடுத்துட்டு வரேன் நீங்க போங்க என்ன அனுப்பி வைக்கிறார். 



பிறகு சமைத்த பாத்திரம் எல்லாம் கழுவி வைத்துவிட்டு சுடுதண்ணி எடுத்துக் கொண்டு ரூமுக்கு செல்ல, இன்டைக்கு என சமைச்ச என முத்து கேட்க, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சாப்பாடு சமைத்தாக சொல்ல, உனக்கு என்ன செய்தா என முத்து கேட்க, வேலை பார்த்தன் என மீனா சொல்லுகிறார்.

அத்துடன், காலையில சீக்கிரம் எழுந்துக்கணும் டயர்டா இருக்கு என படுத்து விடுகிறார்‌. இப்படி நீ பாட்டுக்கு எதுவும் சொல்லாமல் வேலை செஞ்சுகிட்டு இருந்தா உன்னை இந்த வீட்டு வேலைக்காரி ஆக்கிடுவாங்க அப்பாகிட்ட பேசி முதல்ல வேலைக்கு ஒரு ஆள் வைக்கணும் என முத்து கூறுகிறார்.

மறுபக்கம், கார் வாங்குவதற்காக ரவி மற்றும் ஸ்ருதி மனோஜ் ஷோரூம் செல்ல, அங்கு மனோஜ் என்று யாருமே இல்லை என்று அங்கிருப்பவர்கள் கூற இருவரும் குழம்பி நிற்கின்றனர்.

இதனால் ரவி மனோஜ்க்கு போன் பண்ணி ஷோரூமில் இருக்கும் விஷயத்தை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பிறகு யார் அப்படி சொன்னது போனை குடு என்று சொல்ல ரவியும் ஷோரூமில் வேலை செய்பவரிடம் போனை கொடுக்க மனோஜ் இங்கிலீஷில் பேசி பில்டப் கொடுத்து அவரை மிரள வைக்கிறார். மேலும், அடுத்த வாரம் வா.. நல்ல புது கார் வருமென சமாளித்து அனுப்பி வைக்கிறார்.


அதன் பிறகு வீட்டுக்கு வந்த மனோஜ், விஜயாவிடம் நடந்த விஷயத்தை சொல்ல அவர் சீக்கிரம் ஒரு வேலைக்கு போடா என திட்டுகிறார். 

அந்த நேரத்தில், ரோகிணி அங்கு வந்து என்ன ரகசியம் பேசுறீங்க என கேக்க, அவன் ஆபிஸ் கதையை சொல்லிட்டு இருந்தான் என விஜயா சமாளிக்கிறார்.

இதை தொடர்ந்து, மனோஜ் இவ்வளவு நாளா ஒரு விஷயத்தை மறைச்சிட்டான் என ரவியும், ஸ்ருதியும் சொல்ல,, மனோஜ் பதறுகிறார். ஆனால் ரவி அவனுக்கு ஆபீஸ்ல அவனுக்கு நல்ல மரியாதை இருக்கு என பெருமையாக சொல்கிறார். 

ஸ்ருதி அவருக்கு இருக்க திறமைக்கு தனி ஷோ ரூமே வைக்கலாம் என்று சொல்ல விஜயா, ஆமா ரோகினியோட அப்பா வந்தால் இவன் திறமையை பார்த்து தனியாக வைத்து கொடுத்திடுவார் என்று கூறுகிறார். வீட்டுக்கு வரும் முத்து என்ன உங்க அப்பா இன்னும் இந்த பக்கம் தலை காட்டாமல் இருக்காரு என்று கேள்வி கேட்க ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். 

அண்ணாமலையும் எனக்கும் இந்த சந்தேகம் அடிக்கடி வருது, கல்யாணம் ஆகி இவ்வளவு நாள் ஆச்சு இன்னும் உங்க அப்பா வரவே இல்ல. ஒரு போன் கூட பேசல என்று கேட்டு ஷாக் கொடுக்கிறார். இத்து‌டன் இன்‌றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 


Advertisement

Advertisement