• Jan 19 2025

ஆஸ்கர் விருது வென்ற தென் கொரிய நடிகர் மர்ம முறையில் உயிரிழப்பு!

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தென் கொரிய படமான 'பாராசைட்' என்கிற படத்தில் நடித்து பிரபலமான லீ சன் கியூன் மர்மமான முறையில் காரில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாராசைட் திரைப்படம் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு போன்ற பிரிவுகளின் கீழ் விருதுகளை அள்ளிச் சென்றுஅனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

மேலும், குறித்த நடிகருக்கு 48 வயது என்பதோடு, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றமும் சாட்டப்பட்டுள்ளது. அத்துடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரிடம் பொலிஸார் விசாரணையும் நடத்தி உள்ளனர்.

இந்த நிலையில், லீ சன் கியூன் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும், அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார் அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது யாராவது கொலை செய்துள்ளார்களா என்கிற கோணத்தில் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.


Advertisement

Advertisement