• Apr 26 2024

செம்பருத்தி சீரியல் ஷபானா நடிக்கவுள்ள புதிய சீரியலில் கதாநாயகன் யார் தெரியுமா?- அடடே இவரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!


சின்னத்திரையில் மக்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் பொழுது போக்கு நிகழ்ச்சியாக சீரியல்களே அதிகம் காணப்படுகின்றது. அத்தோடு ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் பல்வேறு விதமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு மக்கள் மனதிலே இடம் பிடித்து வருவதைக் காணலாம்.

அந்த வகையில் ஷு தமிழில் ஒளிபரப்பாகிய முக்கிய சீரியல் தான் செம்பருத்தி  1000 எபிசோடுகளுக்கு மேல் ஒளிபரப்பாகி சாதனை படைத்த இந்த சீரியல் அண்மையில் தான் முடிவடைந்தது.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வந்தவர் தான் ஷபானா.இந்த சீரியல் மூலம் இவருக்கு நல்ல ரீச் கிடைத்துள்ளது. அத்தோடு இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆரியன் என்பவரை அண்மையில் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.


மேலும் செம்பருத்தி சீரியல் முடிவடைந்ததைத் தொடர்ந்து ஷபானா சன்டிவியில் புதிய சீரியலில் இணைந்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி அந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக நடிக்க  காவ்யாஞ்சலி சீரியல் பிரபலம் பவண் கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement