• Apr 15 2026

பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் தெரியுமா?- அப்போ டைட்டில் வின்னர் போகலையா

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இது தற்போது சீசன் 7 நடந்து வருகிறது. 100 நாட்களுக்கு மேல் இந்த வீட்டில் யார் தங்குகிறார்களோ மக்களின் வாக்குகளின் அடிப்படையில் அவர்களே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். 

இதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் 18 போட்டியாளர்கள் வந்தனர். அவர்களில் வாரம் ஒருவர் மக்களின் வாக்குகளில் யாருக்கு ஓட்டு குறைவாக இருக்கிறதோ அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்.


அந்த வாரம் ஒவ்வொரு போட்டியாளர்கள் வெளியேறி வரும் நிலையில் கடந்த வாரம் அக்ஷயா மற்றும் விஜே ப்ராவோ ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

முதலில் வீட்டை விட்டு வெளியேறியிருந்த விஜய் வர்மா மற்றும் அனன்யா ராவ் ஆகியோர் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளனர். இதனால் ஆட்டம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.


இந்த நிலையில் இந்த வாரம் மொத்தம் 8 பேர் நாமினேட் ஆகியுள்ள நிலையில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது. அந்த வகையில் தற்பொழுது மக்களின் வாக்குகளின் அடிப்படையில் பிக்பாஸ் வீட்டை விட்டு ஜோவிகா தான் வெளியேறவுள்ளதாகவும் அவருக்கே குறைவான வாக்கு கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement

Advertisement