• Nov 07 2025

ஒரு கருவியும் இல்லாமல் இசையை பேசியவர்கள்....! யார் யார் தெரியுமா?

Roshika / 3 months ago

Advertisement

Listen News!

இசைத்துறையில் பல பரிசுகளும் பாராட்டுகளும் பெற்ற இரண்டு தனித்துவமான ஆளுமைகள் – இளையராஜா மற்றும் ஏ.ஆர். ரஹ்மான். தமிழ் சினிமாவில் இருவரும் ஒவ்வொன்றாகவே இசையின் வரலாற்றை மாற்றியமைத்தவர்கள். குறிப்பாக, இசைக்கருவிகள் இல்லாமல் வெறும் மனித குரல்களின் ஒருங்கிணைப்பில் அமைந்த “அகபெல்லா” பாணி பாடல்கள் இவர்களின் கலைமேன்மையை காட்டும் சிறந்த எடுத்துக்காட்டுகள்.


1995-ம் ஆண்டு வெளிவந்த “மாயாபஜார்” திரைப்படத்தில் இளையராஜா அமைத்த “நான் பொறந்து வந்தது” பாடல், அகபெல்லா பாணியில் அமைந்த அரிய முயற்சி. எஸ். ஜானகியின் தனித்துவமான குரலுடன், லேகா, விஜி, அனுராதா, மற்றும் கீதாவின் கோரஸ் மட்டும் கொண்ட இந்த பாடல், இசைக்கருவிகளின்றி அமைக்கப்பட்டதாலும், இசைக்கலைஞர்களிடையே பெரும் பாராட்டை பெற்றது.


இந்தப் பாடலின் சிறப்பாக, வரிகளை இளையராஜா தானே எழுதியிருந்தார் என்பது ஒரு சுவாரசியம். ஆனால், திரைப்படம் வெற்றிபெறாத காரணத்தால், இந்த கலைநயமிக்க பாடல் அதிகமான கவனத்தை பெறவில்லை என்பது கவலைக்கிடம். அதேபோல, ஏ.ஆர். ரஹ்மானும் 1993- இல் வெளியான திருடா திருடா படத்தில் “ராசாத்தி” எனும் பாடலை அகபெல்லா பாணியில் அமைத்துள்ளார். இந்த பாடல் பெரும் வெற்றியையும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றது.இருவரது முயற்சிகளும் இசையின் எல்லைகளைத் தாண்டும் கலைத்திறனை வெளிக்கொணர்ந்தவை. இன்றும் இந்த பாடல்கள், அகபெல்லா இசையின் சிறந்த தமிழ்ப் பிரதிநிதிகளாக உள்ளன.

Advertisement

Advertisement