• Mar 26 2026

குக் வித் கோமாளி சீசன் 5க்கு வரும் புதிய நடுவர் யார் தெரியுமா? இவர் தான் தாமுவுக்கு ஜோடியா?

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் குக் வித் கோமாளி. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில் விரைவில் அடுத்த சீசனும் ஆரம்பிக்கப்பட உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் திடீரென இயக்குனர், தயாரிப்பாளர், தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் நிகழ்ச்சியில் இருந்து அடுத்தடுத்து வெளியேறி உள்ளனர்.

முதலாவதாக வெங்கடேஷ் பட், குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறுவதாகவும் விரைவில் நல்ல செய்தி சொல்வதாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்து இருந்தார்.


அதை அடுத்து தாமுவும் விலகியிருந்தார். அதன் பின் இயக்குனர், தயாரிப்பாளர் என ஒவ்வொருவரும் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார்கள்.


இந்த நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் புதிய நடுவராக நடிகர் சுரேஷ் பங்கேற்ப இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது.

மேலும், தாமுவும் அடுத்த சீசனில் நடுவராக தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பாளராக ஜெகன் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.




 

Advertisement

Advertisement