• Jan 19 2025

ஆஸ்கர் அவார்டை இழந்த இந்திய ஆவணப்படம்! பெரும் ஏமாற்றத்தில் ரசிகர்கள்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

உலக அளவில் கடந்த ஆண்டு வெளியான சிறந்த திரைப்படங்களுக்கும், அதில் நடித்தவர்களுக்கும் விருதுகளை வழங்கி கௌரவிக்கும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறுகிறது.  

96 அகாடமி ஆஸ்கர் விருது விழாவில் ஆவணப்படங்களுக்கான பிரிவில் இந்தியா சார்பில் 'டு கில் எ டைகர்' என்ற ஆவணப்படம்  பரிந்துரைக்கப்பட்டது.

கனடா நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தின் தயாரிப்பான, "டு கில் எ டைகர்" புது தில்லியில் பிறந்த நிஷா பஹுஜாவால் தயாரிக்கப்பட்டது. இவர் டோரண்டோவில் வாழ்ந்து வருகிறார்.


இந்த நிலையில், குறித்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதைப் பெறும் என எதிர்பார்த்த நிலையில் 'டு கில் எ டைகர் ஆவணப்படம் ஆஸ்கர் விருதை இழந்தது.

மேலும், ஜார்கண்டை சேர்ந்த ஒரு ஆதிவாசி விவசாயி, உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளான தன் மகளுக்கு நீதி கேட்டு போராடுவதை வலியோடு சொல்வதாக இந்த ஆவணப்படம் காணப்படுகிறது. 

Advertisement

Advertisement