• Apr 04 2025

'ஜெய் அல்லு அர்ஜுன் சொல்லு...' பிரபாஸ் ரசிகரை சரமாரியாக அடித்து நொறுக்கிய அல்லு அர்ஜுன் ஃபேன்ஸ்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாத் துறையில் ஜொலிக்கும் பிரபல நட்சத்திரங்களுக்கு என்றே தனித்தனி  ரசிகர் பட்டாளங்கள் காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் விஜய், அஜித், ரஜினிக்கு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் காணப்படுகிறது. அதைப்போல அவர்களின் திரைப்படங்கள் என்றால் தெய்வத்துக்கு வழங்கப்படும் மரியாதைகளை விட அவர்களுக்கு கட் அவுட் வைத்து, மாலையிட்டு, பால் அபிஷேகம் பண்ணி வெகு விமர்சையாக கொண்டாடுவார்கள். அதே போல விஜய், அஜித், ரஜினி ரசிகர்கள் முட்டியும் மோதிக் கொள்வார்கள்.

தமிழ்நாட்டு நிலவரம் இப்படி இருக்க, ஆந்திரா நாட்டு நிலவரம் அதைவிட மோசமாக உள்ளது.


அந்த வகையில், தற்போது கிரிக்கெட் விளையாட்டு ஒன்றின் போது விளையாட்டாக பேசிய விடயம் பூகம்பமாக வெடித்து அடிதடி  சண்டையில் போய் முடிந்துள்ளது.

அதாவது, குறித்த கிரிக்கெட் விளையாட்டில் பிரபாஸ் ரசிகர்களுக்கும் அல்லு அர்ஜுன் ரசிகர்களுக்கும் இடையே சண்டை மூண்டுள்ளது.


இதனால் சட்டை எல்லாம் கழித்து, இரத்தம் சொட்டிய நிலையில் பிரபாஸ் ரசிகர் ஒருவரை, அல்லு அர்ஜுன் ரசிகர்கள் கும்பலாக சேர்ந்து அடித்து நொறுக்கி உள்ளார்கள்.

மேலும் ஜெய் அல்லு அர்ஜுன் என சொல்லு என சொல்லி குறித்த இளைஞரை அடித்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.


Advertisement

Advertisement