• Jun 18 2024

விடுதலை பட நாயகி யார் தெரியுமா?- சினிமாவிற்குள் எப்படி வந்தார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கடந்த 31ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் வெளியாகிய விடுதலை படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர் தான் பாவனிஸ்ரீ. இப்படத்தின் மூலம் இவருக்கென்று நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளது. இந்த நிலையில் இவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.


இவர் இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானின் சகோதரியான ரிகானா என்பவரின் மகள் ஆவார்.ஜு.வி பிரகாஷின் சகோதரியும் ஆவார்.இவர் 1993ம் ஆண்டு சென்னையில் பிறந்திருக்கின்றார்.வளர்ந்தது படித்தது எல்லாமே சென்னையில் தானாம். இசைக் குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு நடிப்பு மற்றும் இயக்கத்தில் தான் அதிக ஆர்வத்துடன் இருந்து வந்தாராம்.


இதனால் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் முதலில் துணை இயக்குநராக தான் இருந்து வந்தாராம். பின்னர் கிடைக்கும் சின்ன சின்ன வாய்ப்பையெல்லாம் பயன்படுத்தி நடிக்க ஆரம்பித்தாராம்.அதன்படி  விஜய் சேதுபதி ஐஸ்வர்யா நடிப்பில் வெளியான கா.பெ ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.


தொடர்ந்து பாவக்கதைகள் என்னும் வெப் சீரியலிலும் நடித்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார்.இதனைத் தொடர்ந்து தான் விடுதலை படத்தில் நடிப்பதற்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது.இப்படத்தில் இவருடைய நடிப்பு  பாராட்டையும் பெற்று வருகின்றது.மேலும் தொடர்ந்து நல்ல கதாப்பாத்திரங்கள் தனக்கு வந்திருப்பதாகவும் அண்மையில் ஓர் பேட்டியில் தெரிவித்திருந்தார். அத்தோடு தொடர்ந்தும் இவர் நல்ல படவாய்ப்புக்களைப் பெற்று வரவேண்டும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement