• Jan 18 2025

தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சரத்பாபு.. காதல் பிரிவு, கல்யாணம் என தனிமையில் தவித்து வந்தாரா.. இதோ முழுமையான தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஹீரோ, வில்லன், குணச்சித்திரம் என தனக்கு கொடுத்த கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த ஒருவர் தான் நடிகர் சரத்பாபு. இவரின் திரை வாழ்க்கை ரொம்பப் பிரகாசமாக இருந்தாலும் அவரின் திருமண வாழ்க்கை ரொம்பப் பிரச்சினையாகவே இருந்தது.

அந்தவகையில் கொஞ்ச நாட்களாக தனிமையில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சரத்பாபு அவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் போராடியவாறு இருக்கார் என தற்போது செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் இவர் வாழ்க்கையில் என்னென்ன விடயங்களைக் கடந்து வந்திருக்கார் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

இவர் ஆந்திராவில் 1951 இல் பிறந்தார். இவரின் நிஜப்பெயர் சத்தியம் பாபு. இவரின் அப்பா அதே ஊரில் உணவு நிறுவனங்களை வைத்து நடாத்தி வந்தார். பின்னர் சரத்பாபு வளர்ந்ததும் அவரிடம் இந்தப் பொறுப்புக்களை கொடுத்திட வேண்டும், அவர்தான் இந்த நிறுவனங்களை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்தார். 


ஆனால் சரத்பாபுவிற்கு சின்ன வயசு முதலே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. மேலும் இவருக்கு காவல் அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசையும் இருந்தது. இவர் கல்லூரிப் படிப்பைத் தொடங்கிய காலத்தில் அவரின் கண்களில் ஒரு பிரச்சனையானது. 

அதாவது கிட்டப் பார்வை என்ற பிரச்சினை இருந்ததனால் அவரினால் தொடர்ந்து காவல் துறை அதிகாரிக்குப் படிக்க முடியவில்லை. கல்லூரிக்காலத்தில் இவருக்கு கலைகளில் அந்தளவிற்கு ஈடுபாடு இல்லை. ஆனால் நண்பர்களின் ஆசைக்காக ஒரு சில கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.


பின்னர் அம்மா கொடுத்த ஆதரவினால் இவரிற்கும் சினிமாவிற்கு வர வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஒரு நாளிதழில் 'நடிப்பதற்கு ஆட்கள் தேவை' என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு முயற்சி பண்ணினார். அந்தவகையில் 1977 இல் கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான 'பட்டின பிரவேசம்' என்ற படத்தில் இவருக்கொரு வாய்ப்புக் கிடைத்தது. 

இதனைத் தொடர்ந்து தமிழில் பல படங்களிலும் நடித்து வந்தார். அதிலும் குறிப்பாக படங்களில் ரஜினி கமலுக்கு நண்பராக அதிகளவில் நடித்திருக்கின்றார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என இதுவரைக்கும் 200க்கு அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார். பல விருதுகளை வென்றதோடு ஒரு சில சீரியல்களிலும் நடித்திருக்கின்றார்.

அத்தோடு 2023 இல் பாபி சிம்ஹா நடித்த 'வசந்த முல்லை' என்ற படத்திலும் நடித்திருந்தார். இதுதான் இவர் தற்போது நடித்த கடைசிப் படம் ஆகும். 


இவரின் தனிப்பட்ட வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் தோல்வி நிறைந்ததாகவே இருந்தது. இவர் ரமா பிரபா என்பவருடன் ஆரம்பத்தில் நட்புடன் பழகி வந்தார். அதன் பின்னர் அது காதலாக மாறத் தொடங்கியது. பின்னர் திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவருக்குமிடையில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு  ஏற்பட்டு பிரியும் நிலை ஆனது.

பின்னர் வில்லன் நடிகர் நம்பியாரின் மகள் சினேகலதா என்பவரை மணம் புரிந்தார். இந்த வாழ்க்கை சில காலம் சந்தோசமாக இருந்து வந்தாலும் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளின் காரணமாக பிரிந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து இவரின் வாழ்க்கை தனியாகவே நகர்ந்தது. இவரின் திருமண வாழ்க்கை சோகமாவே அமைந்தது. இதனால் தனிமையில் வாழ்ந்து வருகின்ற சரத்பாபுவிற்கு தற்போது வயது 71 என்பது குறிப்பிடத்தக்கது. அத்தோடு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவரின் உடல்நிலை குறித்து மருத்துவமனையிலிருந்து இன்னமும் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Advertisement

Advertisement