பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து 2005-ல் திரைக்கு வந்து பெரிய வரவேற்பை பெற்ற படம் அந்நியன். இந்த திரைப்படத்தின் ரீமேக் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது. இதனை இயக்குநர் ஷங்கர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
தமிழில் விக்ரம் ,சதா நடித்து வெளியான இந்த திரைப்படம் தெலுங்கில் அபரிசிடு என்ற பெயரிலும், இந்தியில் அபரிசித் என்ற பெயரிலும் டப் செய்யப்பட்ட வெளியானது. இதனைத்தொடர்ந்து, அந்நியன் படத்தின் இந்தி ரீமேக்கிற்கான அறிவிப்பு கடந்த 2021-ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. ஆனால் இடையில் சில காரணங்களினால் கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் அந்நியன் படத்தின் இந்தி ரீமேக் குறித்து ஷங்கர் அப்டேட் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் 'தற்போது பெரிய அளவில் ஏதாவது செய்யப் பார்க்கிறோம். பல பான்-இந்தியப் படங்கள் வந்துள்ளன. ரன்வீர் சிங்குடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற திட்டமிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். இது ஒருவேளை அந்த அந்நியன் ரீமேக்காக இருக்க வாய்ப்பு இருக்கிறது என நெட்டிசன்கள் பரவலாக பேசிவருகிறார்.
Listen News!