விஜய் டிவி பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம் டபுள் எலிமினேஷன் நடைபெறுள்ளது. ஏற்கனவே போட்டியாளர் அருண் நேற்று எலிமினேஷன் ஆகிய நிலையில் இன்று எலிமினேட் ஆனா அடுத்த போட்டியாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 8 தற்போது இறுதி வாரங்களை நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் அனைவராலும் கொண்டாடப்படும் ஒரு போட்டியாளராக இருந்தவர் தீபக் எலிமினேஷன் ஆகி இருக்கிறார். பொறுமையாகவும் தெளிவாகவும் விளையாட்டை விளையாடி வந்தார்.
PR டீம் வைத்து பலர் தங்களை புரொமோஷன் வரும் இந்த காலத்தில் அப்படி எதையும் செய்யாமல் Organicஆக என்ன வருகிறதோ அதையே செய்யலாம் என விளையாட்டை விளையாடி வந்தார்.
இந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் தீபக் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். அவர் எலிமினேட் ஆன விஷயம் அனைவருக்குமே ஷாக் என கூறலாம். பைனல் நெருங்கும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ள தீபக்கிற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
Listen News!