• Aug 25 2026

ஜீ தமிழ் சீரியலில் என்றி கொடுக்கும் பிக் பாஸ் பிரபலம்.... யார் என்று தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று வீரா. இந்த தொடரில் பிக் பாஸ் பிரபலம் என்றி கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.  இந்த சீரியலில் வைஷ்ணவி அருள்மொழி மற்றும் அருண் ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். 


2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த சீரியல் துவங்கிய நிலையில், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் பிரமாண்டமாக நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் நடிகை அபிராமி. இந்த சீரியலில் கதாநாயகியின் தோழியாக நடிகை அபிராமி என்ட்ரி கொடுத்துள்ளார். 


அதற்கான ப்ரோமோ வீடியோவை தற்போது ஜீ தமிழ் வெளியிட்டுள்ளது. அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் நடிகை அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் இவருக்கு திரையுலகில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி கொடுத்து. படங்கள் மட்டுமின்றி வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த கதாபாத்திரத்தில் அவர் என்ன செய்ய இருக்கிறார் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். 

Advertisement

Advertisement