• Sep 09 2024

ஏன் எனக்கு ரசிகர்கள் வரக்கூடாதா? அதுமட்டுமே பாக்குறாங்க... ஆதங்கத்தை வெளிப்படுத்திய நடிகர் சூரி...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

சிவகார்திகேயனின் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் "கொட்டுக்காளி" நடிகர் சூரியின் அடுத்த திரைப்படமாகும்.  இந்நிலையில் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்று படத்தின் தயாரிப்பாளர் மற்றும் சூரியின் அன்பு தப்பி சிவகார்த்திகேயன் என் பலர் கலந்துகொண்ட நிலையில் நடிகர் சூரி இவ்வாறு தனது உரையை நிகழ்த்திருந்தார். 


 "கொட்டுக்காளி" படத்தின் ட்ரைலரினை வெளியிட்டு வைத்துள்ளனர். கதையை ஊகிக்க முடியாத இந்த ட்ரைலர் 02 நிமிடம் 08 செக்கன் நீளத்தை கொண்டுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்பபை தூண்டும் வகையில் இந்த ட்ரைலர் அமைந்துள்ளது. 


இந்நிலையில் நடிகர் சூரி படம் தொடர்பாக பேசுகையில் '' இன்றைக்கு முக்கியமான தேடலுக்கு கண்டன்ட் ஆக்கிட்டிங்க, ஒரு சில பேர் என்னோட ரசிகர்கள் எவ்வளோ பேர் வாரங்க எங்க இருந்து வாரங்க என்று பார்க்கிறார்கள். எனது ரசிகர்கள் என்று சொல்லும் போது  சென்னையில் இருந்து மட்டும் வருவது இல்லை எல்லா இடங்களிலும் இருந்து வருகிறார்கள். 


இந்த படம் தொடர்பாக எல்லாரும் பேசும் போது எனக்கே நானா நடிச்சி இருக்கேன் என்று தோணுது இந்த படம் நான் நடிச்சதுல வேறுபட்டதாக இருக்கும். அன்பு தம்பி தயாரித்த திரைப்படத்துல நானே நாயனாக நடிக்கிறது பெருமையா இருக்கு. இந்த படம் நல்லா இருக்கும் இயக்குனர் வினோத்தின் புது முயற்சி  எல்லாரும் பாருங்க என்று கூறியுள்ளார்.  

Advertisement

Advertisement