• Jan 19 2025

இது நடந்தால் இதை செய்வேன்... கொட்டுக்காளி படம் மட்டும் ஓடட்டும்... சிவகார்த்திகேயன் அதிரடி பேச்சு...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் எதிர் நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஹீரோக்களில் இவரும் ஒருவர். ஒருபக்கம், சினிமாவில் நடித்துக்கொண்டிருந்தாலும் அவ்வப்போது திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். 


இந்நிலையில் திரையுலகில் மிகவும் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சூரி. படங்களில் வாடா போடா என அழைத்துக்கொண்டாலும் நிஜத்தில் அண்ணன் – தம்பியாக இருவரும் பழகி வருகிறார்கள். இந்நிலையில் தான் சூரி நடிப்பில் உருவாகியுள்ள கொட்டுக்காளி திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படம் வருகிற 23ம் தேதி வெளியாகவுள்ளது.


இந்த படத்தை வினோத் என்பவர் இயக்கியுள்ளார். ஏற்கனவே இப்படம் பல வெளிநாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டை பெற்றிருக்கிறது. கொட்டுக்காளி படத்தின் டிரெய்லர் வீடியோ இன்று வெளியானது.


இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் ‘கொட்டுக்காளி படம் ஹிட் அடித்து என் முதலீட்டை விட லாபம் வந்தால் அதை இயக்குனர் வினோத்துக்கு அடுத்த படத்திற்கான முன் பணமாக கொடுப்பேன். அதிகமான லாபம் வந்தால் வினோத் போன்ற 2 இயக்குனர்களுக்கு முன் பணமாக கொடுப்பேன். எனக்கு வாழ்க்கை கொடுத்த இந்த சினிமாவிற்கு என்னால் முடிந்த சிறு உதவி இது’ என அவர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். 

Advertisement

Advertisement