• Jan 18 2025

மகாநதி சீரியல் காவேரி யார் தெரியுமா?- அடடே அழகிப் பட்டம் எல்லாம் வென்றவரா?- இதுவரை தெரியாத விடயங்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டாலும் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மகாநதி. இந்த சீரியலில் காவேரி என்னும் கதாப்பாத்திரத்தில் நடிப்பவர் குறித்து தான் தற்பொழுது பார்க்கலாம் வாங்க.

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலுக்கென்று தனி மவுசு காணப்படுகின்றது. அதிலும் சீரியல் மூலம் பிரபல்யமாவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தினைத் தேடி அவர்களை பாலோ பண்ணுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.அந்த வகையில் மகாநதி சீரியலில் காவேரி என்னும் ட்ரோலில் நடித்து வருபவர் தான் லக்ஷ்மி ப்ரியா.இந்த சீரியல் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உருவாகியுள்ளது.


சிறுவயதில் இருந்தே மார்டலிங் துறையில் ஆர்வம் கொண்ட இவர் காலேஜ் படிப்பை முடித்து விட்ட பின்னர் முழு நேரமாக மார்டலிங் துறையில் ஆர்வம்  காட்ட ஆரம்பித்து விட்டார். மேலும் மிஸ் மிராக்கி 2018 என்னும் அழகிப் போட்டியில் கலநது கொண்டு டைட்லில் வின்னராகவும் ஆனார்.இதனைத் தொடர்ந்து குங்குமம் போன்ற பத்திரிகைகளின் முன் பக்கத்தில் இடம் பிடிக்கக் கூடிய மாதிரியான போட்டோ ஷுட் நடத்தி வந்தார்.

பின்பு படங்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்ததால் சில படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் யோகிபாவுடன் சேர்ந்து நடித்த பன்னி குட்டி திரைப்படம் தான் இவருக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்தாலும் சீரியலிலும் நடிக்க ஆர்வம் காட்டினார். அதன்படி தான் மகாநதி சீரியலில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை 40 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் பாலோ பண்ணியும் வருகின்றனர்.அத்தோடு தொடர்ந்து ரசிகர்களிடையே இவருக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement