• Jan 18 2025

கண்ணே கலைமானே சீரியல் நடிகர் நந்தா மாஸ்டர் யாரென்று தெரியுமா?-ஜெயம் ரவிக்கு டான்ஸ் மாஸ்டராக இருந்தவரா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட சீரியல் தான் கண்ணே கலைமானே. இந்த சீரியல் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கின்றது.அந்த வகையில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து வருபவர் தான் நந்தா மாஸ்டர். இவர் இதில் ராம் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். அந்த வகையில் வாங்க இவர் குறித்து பார்க்கலாம்.

நந்தா மாஸ்டர் நடன இயக்குநராக கலைஞர் தொலைக்காட்சி மற்றும் ஷு தமிழ் ஆகியவற்றில் கடமையாற்றியிருக்கின்றாராம்.அத்தோடு கலாமாஸ்டரின் அசிஸ்டென்டாகவும் இருந்திருக்கின்றாராம். இருப்பினும் ஷு தமிழில் ஒளிபரப்பான கோகுலத்தில் சீதை சீரியல் மூலம் தான் ரசிகர்களிடையே மிகவும் பிரபல்யமானார்.


இவர் ஜுன் 26ம் ஆண்டு சென்னையில் தான் பிறந்தாராம்.இவர் சினிமாவிற்கு வரக் காரணம் இவரது தாத்தா தானாம். இவரது தாத்தா தயாரிப்பாளராக இருந்திருக்கின்றாராம்.ஆனால் இவர் தயாரித்த திரைப்படங்கள் தோல்வியைச் சந்தித்ததால் தனது குடும்பத்தில் யாரும் சினிமாவிற்கு போகக் கூடாது என அவரது தாத்தா முடிவெடுத்துள்ளார்.

இருந்தாலும் இவர் நடனத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால் வீட்டை விட்டு வெளியே வந்ததுடன் ஜான் பிரிட்டோ என்பவரிடம் நடனத்தை முறையாகக் கற்றுக் கொண்டாராம்.அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சம் முன்னேறிய இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபு தேவா நடன நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வாய்ப்புக் கிடைத்ததோடு இதில் இரண்டாம் இடத்தையும் பெற்றாராம்.

இதன் பின்னர் பிரபு தேவாவுடன் பல பாடல்களில் நடனமமைத்து வந்த இவருக்கு படவாய்ப்புக்களும் கிடைத்ததாம் அதன்படி வாடா போடா மற்றும் புகைப்படம் ஆகிய படங்களில் நடித்திருந்தாராம். ஆனால் அவை ரசிகர்களிடையே வரவேற்புப் பெறவில்லையாம்.இதனைத் தொடர்ந்து மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற திரைப்படத்தில் தான் இயக்குநராக அறிமுகமாகினாராம்.


இதனைத் தொடர்ந்து 150 படங்களுக்கு மேல் நடனம் அமைத்துள்ளாராம். குறிப்பாக ஜெயம் ரவிக்கு நடனம் சொல்லிக் கொடுத்துள்ளாராம். அதே போல நந்தா என்னும் நடன ஸ்கூலையும் நடத்தி வருகின்றாராம். இது ஒரு புறம் இருக்க அவர் தன்னுடன் நடனம் கற்க வந்த நடிகை சாந்தினியைத் தான் காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார். இவர்கள் இருவருமே தற்பொழுது சின்னத்திரையில் முக்கிய நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement