தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்து பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் நடிகர் அஜித் குமார். நடிப்பிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் எப்பொழுதும் நிதானத்தையும், நேர்த்தியையும் விரும்பும் அவர், தற்போது திரையுலகத்தை தற்காலிகமாக விட்டு கார் ரேஸ் ஓடுவதில் கவனம் செலுத்தி வருகின்றார்.
அவர் சமீபத்தில் FIA கார் ரேஸிங் போட்டிகளில் பங்குபற்றிய விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் பரிசுகள் என்பன தொடர்ந்து இணையத்தில் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் ரசிகர்கள் பலரும் அஜித்தின் அடுத்த படம் எப்போது? அதனை யார் இயக்கப்போகிறார்கள்? எனப் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
அந்தவகையில் அதிகளவான இயக்குநர்கள் போட்டி போட்டுள்ளனர். குறிப்பாக, கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீலுடன் அஜித் குமார் இணைகிறார் என கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து, அட்லீ அஜித்திடம் மூன்று கதைகள் கூறியதாகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் புஷ்பா படத்தின் மூலம் தேசிய அளவில் புகழ்பெற்ற சுகுமார், தற்போது புஷ்பா3 படத்தில் முழுமையாக இயங்கிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும், அஜித்– சுகுமார் கூட்டணி உருவாகும் வாய்ப்பு உள்ளது என இணையத்தில் பல முன்னணி பக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.
அஜித் குமார் எப்பொழுதும் அறிவிப்புக்கள் எதுவும் இல்லாமல் நேரடியாகப் படப்பிடிப்பினை ஆரம்பித்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பவர். அதனால், AK65 யாருடன், எப்போது உருவாகப் போகின்றது என்பதை நாம் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய நிலைமை தற்பொழுது உருவாகியுள்ளது.
Listen News!