• Sep 19 2024

கோட் திரைப்படத்தில் கேப்டன் விஜயகாந்த்துக்கு வாய்ஸ் கொடுத்தது யார் தெரியுமா? அட இவரா!

subiththira / 1 week ago

Advertisement

Listen News!

சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கால்பாத்தி எஸ் அகோரம்  தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தான் கோட் திரைப்படம். இந்த திரைப்படம் சொன்ன மாதிரியே எந்த ஒரு தடையும் இல்லாமல் செப்டம்பர் 5ஆம் திகதி ரிலீஸாகி வசூலில் பட்டையை கிளப்பிவருகிறது. 


இந்த நிலையில் GOAT திரைப்படம்  டிரெண்டிங்கில் இருந்து வரும் நிலையில், முதல் காட்சியிலேயே கேப்டன் விஜயகாந்த் கோட் சூட்டில் வரும் காட்சியை இணையத்தில் வைரலாகி வந்தது. கோட் படத்தின் ஆரம்பத்திலேயே கேப்டன் விஜயகாந்த் என்ட்ரி செம ட்விஸ்ட்டாக இருந்து. 


இதனை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளதோடு இணையத்திலும் லீக் செய்ததால் தற்போது தீயாக பரவி மக்களை ஈர்த்துள்ளது. மறைந்த கேப்டன் விஜயகாந்த்தை வெங்கட் பிரபு தனது கிரியேட்டிவிட்டி மூலம் கொண்டு வந்துள்ளார். அதற்காக அர்ச்சனா கால்பாத்தி பல கோடிகளை செலவு செய்து உருவாக்கியுள்ள நிலையில், முதல் காட்சியே விஜயகாந்த் வரும் காட்சி படத்தில் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் உருவத்தை எடுத்தாலும் வாய்ஸ் எப்படி வந்தது என்று ஒருகுழப்பம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அப்போது அதற்கான விடையும் கிடைத்துள்ளது. குட் நைட், ஜெய்ப்பீம்,  போன்ற படங்களில் தனது இயல்பான நடிப்பை காட்டி ரசிகர்களை கவர்ந்தவர் மணிகண்டன். கோட் திரைப்படத்தில் விஜயகாந்த அவர்களுக்கு வாய்ஸ் அவர் தான் கொடுத்துள்ளார். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது. 




Advertisement

Advertisement