• Jan 19 2025

11ம் வாரம் நாமினேஷனில் தேர்வாகியிருக்கும் 6 போட்டியாளர்களும் யார் தெரியுமா?- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே...

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்டமான ரியாலிட்டி ஷோ பிக் பாஸ் சீசன் 7 கடந்த அக்டோபர்  முதலாம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. எதுக்கு இந்த சீசனை ஆரம்பித்தோம் என சேனலே புலம்பும் அளவிற்கு இந்த நிகழ்ச்சி இப்போது போய்க்கொண்டிருக்கிறது. 

நடிகர் கமல்ஹாசன் கடந்த ஏழு வருடங்களாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆனால் இந்த சீசனில் அவருடைய பெயர் ரொம்பவே கெட்டுப் போய்விட்டது.


பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததிலிருந்து இந்த சீசன் அடி வாங்க தொடங்கியது. அதிலும் மாயா, பூர்ணிமா மற்றும் நிக்சனை வெளியே அனுப்பாமல் வீட்டிற்குள் வைக்க பிக் பாஸ் செய்யும் தந்திரமான வேலைகள் மக்களை ரொம்ப வெறுப்படைய செய்திருக்கிறது. 

அதிலும் கடந்த வாரம் எபிசோடுகளில் நிக்சனுக்காக வரிந்து கட்டிக்கொண்டு கமல் மணி மற்றும் தினேஷிடம் பேசியது அவருடைய மொத்த பெயரையும் டேமேஜ் செய்து விட்டது.இதனால் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிருந்து விலகப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது.


இது ஒருபுறம் இருக்க பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் மிக்ஜாம் புயல் காரணமாக நாமினேசன் நடக்கவில்லை, இந்த நிலையில் இந்த வாரம் யார் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்புக் காணப்படுகின்றது. அதன்படி அந்த வாரம் தினேஷ்,கூல் சுரேஷ்,அனன்யா,அர்ச்சனா,நிக்சன், விஷ்ணு ஆகியோரே நாமினேட் ஆகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement