• Jan 19 2025

ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொன்ன சமந்தா,இரண்டாவது முறையாக செய்யப்போகின்றாரா?- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் சமந்தா. இதனைத் தொடர்ந்து இவர் தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலுமே சமந்தா கவனம் செலுத்த துவங்கிய நிலையில், மிக குறுகிய காலத்தில், இரு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

முன்னணி நடிகையாக இருக்கும் போதே தன்னுடைய நீண்டநாள் காதலரான நாகசைதன்யாவை கரம்பிடித்தார். இவர்களின் திருமணம் கோவாவில் மிக பிரமாண்டமாக நடந்தது.இருப்பினும் தன் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக,அவரை விவாரத்து செய்து விட்டு தனிமையில் வாழ்ந்து வருகின்றார்.


படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போதே மயோசிடிஸ் என்னும் கொடிய நோயால் பாதிக்கப்பட்டதால், அதற்கான முழுமையானன சிகிச்சையை தற்பொழுது பெற்று வருவதோடு,நடிப்பிலிருந்து சற்று விலகியுள்ளார்.இருப்பினும் சின்ன சின்ன நிகழ்ச்சிகள் கலந்துகொள்வது என பிஸியாக இருக்கிறார்.

அண்மையில் அவர் கொஞ்சம் கிளாமரான உடையில் போட்டோ ஷுட் நடத்தி வெளியிட அதற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வந்தார்கள்.சமந்தா ஏற்கெனவே பள்ளி குழந்தைகளுக்காக Ekam நிறுவனம், ஆடை துறையில் Saaki என்ற நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் Tralala என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.


எனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நிறுவனத்தின் மூலம் நல்ல படங்களை கொடுப்பேன்.புதிய சிந்தனை மற்றும் மன வெளிப்பாடு உள்ளடக்கத்தை பிரதிநிதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது என பதிவு செய்துள்ளார்.


Advertisement

Advertisement