• Jul 11 2026

எதிர்பார்த்த அளவுக்கு ஓடாத 'மா இன்டி பங்காரம்'... முதல் நாள் வசூல் என்ன சொல்கிறது தெரியுமா

shali / 3 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் நந்தினி இயக்கத்தில், பிரபல நடிகை சமந்தா நடித்துள்ள தெலுங்குத் திரைப்படமான 'மா இன்டி பங்காரம்' ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 19, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வசூலைப் பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியான முதல் நாளிலேயே 'மா இன்டி பங்காரம்' உலகளவில் சுமார் ரூ.10.70 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் இந்திய சந்தையில் மட்டும் ரூ.6.20 கோடி வசூலாகியுள்ளதுடன், வெளிநாடுகளில் ரூ.4.50 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


குறிப்பாக சமந்தாவின் ரசிகர்கள் அதிகம் உள்ள அமெரிக்கா, வளைகுடா நாடுகள் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிரடி மற்றும் உணர்ச்சிகரமான கதைக்களத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சமந்தா வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது நடிப்பு, திரைக்கதை மற்றும் படத்தின் தொழில்நுட்ப அம்சங்கள் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளை பெற்று வருகின்றன. 

முதல் நாள் வசூல் நிலவரத்தை பார்க்கும் போது, வரும் வார இறுதியில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. 'மா இன்டி பங்காரம்' சமந்தாவின் கேரியரில் மற்றொரு வெற்றிப் படமாக அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement

Advertisement